மாரடைப்பால் மரணித்த 16 வயது மாணவி... காரணம் என்ன?

பள்ளியில் குடியரசு தின ஒத்திகையின்போது மயக்கம்போட்டு விழுந்த 11ஆம் வகுப்பு மாணவி, மாரடைப்பால் உயிரிழந்ததாக உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Jan 28, 2023, 06:52 AM IST
  • அதிக குளிரால் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் - மருத்துவர்கள்.
  • மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பே அந் மாணவி உயிரிழந்துவிட்டார்.
மாரடைப்பால் மரணித்த 16 வயது மாணவி... காரணம் என்ன?

மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள கடந்த சில நாள்களாக கடும் குளிர் வீசி வருகிறது. இருப்பினும், பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன. அந்த வகையில், இந்தூரின் உஷா நகர் பகுதியில் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. 

அந்த பள்ளியில், விருந்தா திரிபாதி என்ற 11ஆம் வகுப்பு பயிலும் மாணவிக்கு பள்ளியில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சுயநினைவு இழந்து மயக்கம்போட்டு விழுந்துள்ளார். பள்ளியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் கடந்த ஜன. 25ஆம் தேதி நடைபெற்றுள்ளது. 

அந்த மாணவி, சம்பவ தினத்திற்கு அடுத்த நடைபெற உள்ள குடியரசு தின விழாவிற்கான ஒத்திகைக்காக பள்ளிக்கு சென்றுள்ளார். ஒத்திகையின்போதுதான் அவர் மயக்கம் போட்டு விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மாணவியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசென்ற நிலையில், மருத்துவர்கள் சிபிஆர் கொடுத்து உயிரை காப்பாற்ற இயலவில்லை என கூறப்படுகிறது. மேலும், மாணவி மருத்துவமனைக்கு அழைத்துவரும் முன்னரே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

மேலும் படிக்க | மருமகளை திருமணம் செய்த மாமனார்... 42 வயது வித்தியாசம் - பொங்கும் நெட்டிசன்கள்

"இதய செயலிழப்புக்கு முன் பிருந்தா முற்றிலும் நலமாக இருந்தார். அவர் அதீத குளிர்ச்சியால் இறந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்" என்று மாணவியின் உறவினர் தெரிவித்தார். மாவட்ட மருத்துவமனையில் மாணவியின் உடற்கூராய்வு நடத்தப்பட்டது. அதில் அவர் மயக்கம் போட்டு விழுந்ததன் காரணமாக கன்னத்தில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் மேலும் அவர் மாரடைப்பால் இறந்தார் என்று ஒரு அதிகாரி கூறினார்.

சிறுமி இறக்கும் போது மெல்லிய ட்ராக் சூட் அணிந்திருந்ததாகவும், அவளது வயிற்றில் சிற்றுண்டித் துகள்கள் காணப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

சிறுமியின் மரணத்தைத் தொடர்ந்து, துக்கமடைந்த சிறுமியின் குடும்பத்தினர் அவரது கண்களைத் தானம் செய்துள்ளதாக, உறுப்பு தானத்திற்கான இந்தூர் சங்கத்துடன் தொடர்புடைய முஸ்கான் குழுமத்தின் தன்னார்வத் தொண்டர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும், இருதயநோய் நிபுணர், மருத்துவர் அனில் பரணி,"கடுமையான குளிர் காலத்தில், குறிப்பாக அதிகாலை 4 மணி முதல் காலை 10 மணி வரை, மனித உடலில் உள்ள பல்வேறு ஹார்மோன்களின் அளவு அதிகரித்து, ரத்தக் கட்டிகள் உருவாகி, திடீரென மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும். கடுமையான குளிர் காலநிலையை சமாளிக்க மக்கள் சத்தான உணவை உட்கொள்ளவும், உடற்பயிற்சி செய்ய வேண்டும்" என அறிவுறுத்தினார். 

மேலும் படிக்க | 55 பயணிகளை ‘விட்டு’ சென்ற Go First விமானம்! ரூ.10 லட்சம் அபராதம் விதித்த DGCA

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News