மருமகளை திருமணம் செய்த மாமனார்... 42 வயது வித்தியாசம் - பொங்கும் நெட்டிசன்கள்

70 வயதான நபர், தனது மறைந்த மகனின் மனைவியான 28 வயது பெண்ணை திருமணம் செய்ததாக கூறப்படும் நிலையில், அவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

Written by - Sudharsan G | Last Updated : Jan 27, 2023, 03:06 PM IST
  • அந்த முதியவர் மகன் சில ஆண்டுகளுக்கு முன் காலமானார்.
  • தொடர்ந்து, அவரின் மருமகளுக்கு மறுமணம் நடந்தது.
  • ஆனால், மறுமணம் சரியாக அமையவில்லை என கூறப்படுகிறது.
மருமகளை திருமணம் செய்த மாமனார்... 42 வயது வித்தியாசம் - பொங்கும் நெட்டிசன்கள்

உத்தரப் பிரதேசத்தின் கோராக்பூர் நகரைச் சேர்ந்த கைலாஷ் யாதவ் (70) என்பவர் பர்ஹல்கஞ்ச் காவல் நிலையத்தில்  வாட்ச்மேனாக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி 12 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டார். அவருக்கு மொத்தம் 4 குழந்தைகள். 

சில ஆண்டுகளுக்கு, அவரது மூன்றாவது மகனும் உயிரிழந்தார். உயிரிழந்த அவரின் மகனுக்கு பூஜா என்ற பெண்ணுடன் திருமணமாகியிருந்தது. பூஜாவின் கணவர் உயிரிழந்தவுடன் அவர் மறுமணம் செய்துள்ளார். ஆனால், அந்த திருமணமும் சரியாக அமையததால் பூஜா தனியாக வசித்ததாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | மக்களவை தேர்தல் இன்று நடந்தால்... ஆட்சியை கைப்பற்றுமா பாஜக - குட் நியூஸ் யாருக்கு?

இதையடுத்து, பூஜாவை நன்றாக பார்த்துக்கொள்வதாக கூறி அவரை கைலாஷ் திருமணம் செய்துள்ளார். அதன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பூஜாவின் நெற்றியில் கைலாஷ் குங்குமம் வைக்கும் அந்த புகைப்படம் வெளியாகும் வரை அந்த கிராமத்தினருக்கு அவர்களுக்கு இடையே திருமணம் நடந்ததே தெரியாது என கூறப்படுகிறது. அவர்களுக்கு இடையே எப்படி திருமணம் நடந்தது என்பதை அந்த தம்பதியினர் இதுவரை பொதுவெளியில் கூறவேயில்லை. 

மற்றவர்கள் குறித்து கவலைப்படுத்தாத கைலாஷ், பூஜாவுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். அவர்கள் குடும்பத்தினர் உள்பட யாரின் கேள்விக்கும் கைலாஷ் பதில் சொல்லவில்லை. மேலும், அந்த பெண்ணின் சம்மதம் இல்லாமல் அவர் திருமணம் செய்திருக்க வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது. 

இதுகுறித்து, உத்தரப் பிரதேசத்தின் பர்ஹல்கஞ்ச் காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர், ஜேஎன் சுக்லா, சமூக ஊடகங்களில் புகைப்படத்தைப் பார்த்ததாகவும், இப்போது திருமணம் குறித்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

மறைந்த மகனின் மனைவியையே திருணம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கைலாஷ் யாதவுக்கும், பூஜாவுக்கும் சுமார் 42 வயது வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, அந்த வைரலான புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் கலவையான விமர்சனத்தை பதிவிட்டு வருகின்றனர். 

மேலும் படிக்க | வினோத வழக்கு! 45 ஆண்டுகளாக பூண்டு - வெங்காயத்தை சுவைக்காத கிராம மக்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News