65 வயது பெண்மணிக்கு 14 மாதங்களில் எட்டு குழந்தைகள் பிறப்பது சாத்தியமா என்றால், சாத்தியம் தான் என கூறுகிறது பீகாரில் சமர்பிக்கப்பட்ட ஆவணங்கள்.
பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் மாவட்டத்தின் முஷாஹரி தொகுதியில் அரசு பணம் பறிக்கும் இடைத்தரகர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் ஆச்சரியத்தை கொடுக்கின்றன. இதன்படி, 65 வயதான ஒரு பெண் வெறும் 14 மாதங்களில் எட்டு பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
பெண் குழந்தைக்காக கொடுக்கப்படும் ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு தான் இத்தனை மோசடி வேலைகள்.
இந்த மோசடி வேலையில் பல ஊழியர்கள் சம்பந்தப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.
மோசடி நடப்பதை கண்டறிந்த முஷேஹரி ஆரம்ப சுகாதார மைய பொறுப்பாளர் உபேந்திர சவுத்ரி, இந்த விவகாரம் தொடர்பாக உள்ளூர் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளார். அதன் பின்னர் தான் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
மேலும் படிக்க | ஷெல் கம்பெனி மூலம் ஆம் ஆத்மி கட்சிக்கு 2 கோடி நன்கொடை அளித்த தொழிலதிபர்கள் கைது…!!
பெண் முழந்தை பிறந்தால், அரசு சார்பாக ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம் நடடைமுறையில் உள்ளது. பெண் குழந்தை பிறந்தால், ரூ .1,400 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
இது குறித்து விசாரணை செய்து பார்க்கும் போது, பல பெண்களுக்குசில மாதங்களிலேயே பல முறை பிரசவம் ஆகியுள்ளது என்பதாக ஆவணங்களில் காட்டப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்பவரை கொடுமைப்படுத்திய இந்திய தம்பதியினருக்கு சிறை..!!!
முறைகேடுகள் குறித்து விசாரணை செய்ய, மாவட்ட மாஜிஸ்திரேட் சந்திரசேகர் சிங் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டார். முதல் கட்ட விசாரணையிலேயே, கூடுதல் மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் குமார் தலைமையிலான விசாரணைக் குழு முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகள் உண்மை என்று கண்டறிந்துள்ளது. குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.