டிரம்ப் வருகைக்காக மொடேரா பகுதி குடிசைவாசிகள் காலி செய்ய சொன்ன அகமதாபாத் நகராட்சி

டொனால்ட் டிரம்ப் வருகைக்கு முன்னதாக, அகமதாபாத்தின் மொடேரா பகுதியில் உள்ள குடிசைவாசிகளுக்கு வெளியேற்ற அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

Last Updated : Feb 18, 2020, 03:08 PM IST
டிரம்ப் வருகைக்காக மொடேரா பகுதி குடிசைவாசிகள் காலி செய்ய சொன்ன அகமதாபாத் நகராட்சி title=

டொனால்ட் டிரம்ப் வருகைக்கு முன்னதாக, அகமதாபாத்தின் மொடேரா பகுதியில் உள்ள குடிசைவாசிகளுக்கு வெளியேற்ற அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவரும் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி மற்றும் 25 ஆம் தேதியில் இந்தியாவில் பயணம் மேற்கொள்கின்றனர்.  24 ஆம் தேதி குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதால் அங்கு சாலைகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. 

அந்தவகையில் டிரம்ப் வருகைக்காக ற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. சபர்மதி ஆசிரம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதால், டிரம்ப் பயணிக்கும் வழிகளில், அவரை கவரும் வகையில் சாலைகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.  

இந்த நிலையில், டிரம்ப் வருகையை முன்னிட்டு மொடேரா பகுதி குடிசை வாசிகள் 7 நாட்களில் காலி செய்யுமாறு அகமதாபத் நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அளித்துள்ளது. சுமார் 45 குடும்பத்தினர் அப்பகுதியில் வசித்து வரும் நிலையில், அவர்களை வெளியேறுமாறு நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.

Trending News