கொரோனாவுக்கு இந்தியாவில் மற்றொரு பலி; 85 வயது குஜராத் பெண் இறப்பு!

இந்தியாவில் புதன்கிழமை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மற்றொரு நோயாளி இறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் வைரஸ் தொற்றுநோய்களின் மொத்த உயிரிழப்புகள் நாட்டில் 12-ஆக அதிகரித்துள்ளது.

Updated: Mar 25, 2020, 11:08 PM IST
கொரோனாவுக்கு இந்தியாவில் மற்றொரு பலி; 85 வயது குஜராத் பெண் இறப்பு!

இந்தியாவில் புதன்கிழமை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மற்றொரு நோயாளி இறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் வைரஸ் தொற்றுநோய்களின் மொத்த உயிரிழப்புகள் நாட்டில் 12-ஆக அதிகரித்துள்ளது.

அகமதாபாத்தை சேர்ந்த 85 வயதான பெண் கொரோனா தொற்று காரணமாக புதன்கிழமை இறந்தாதாக குஜராத் சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியது.

அந்த பெண் வெளிநாட்டுக்குச் சென்று கொரோனா வைரஸ் அறிகுறிகளை பெற்று மார்ச் 22 அன்று அகமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்றை தவிர நோயாளிக்கு இதர பல சிக்கல்கள் இருந்ததாகவும், அதன் காரணமாக அவர் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சமூகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைப் பற்றி கவலை கொண்ட அகமதாபாத் நகராட்சி ஆணையர் விஜய் நெஹ்ரா திங்களன்று குடிமக்களுக்குள் வைரஸ் பரவாமல் தடுக்க தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொள்ளவும், பகுதி பூட்டுதலைப் பராமரிக்கவும் வேண்டுகோள் விடுத்தார்.

இப்போது, MAC மற்றும் மாநில அரசு நகரத்தில் 10,000 நபர்களுக்கு தற்காலிகமாக தனிமைப்படுத்த ஏற்பாடுகளைச் செய்துள்ளன, அவை 20,000 வரை அளவிடப்படலாம், ஆனால் வேறு எதையும் கையாள கடினமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குஜராத்தை பொறுத்தவரையில் இதுவரை 38 கொரோனா தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளது. இதில் ஒருவர் தற்போது சிகிச்சை பலன் இன்றி பலியாகியுள்ள நிலையில், தற்போது மாநிலத்தில் கண்காணிப்பில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 37-ஆக உள்ளது.