ஆம் ஆத்மி கட்சி பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடியை அழைத்த அரவிந்த் கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சியின் புதிய பதவியேற்பு விழாவிற்கு கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Feb 14, 2020, 01:59 PM IST
ஆம் ஆத்மி கட்சி பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடியை அழைத்த அரவிந்த் கெஜ்ரிவால்
File Photo

புது டெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் புதிய பதவியேற்பு விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைக்கப்பட்டுள்ளார். சத்தியப்பிரமாணம் நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடிக்கு கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து மூன்றாவது முறையாக டெல்லி முதல்வராக பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 16 ம் தேதி நடைபெறும் பதவியேற்பு விழாவிற்கு அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடியையும் அழைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. இந்த பதவியேற்பு விழா டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் என்பது கவனிக்கத்தக்கது.

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு கடந்த 8 ஆம் தேதி நடந்தது. பிப்ரவரி 11 ஆம் தேதி நடந்த வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு 8 இடங்கள் கிடைத்தன. காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. இரண்டாவது முறையாக காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற வில்லை. 

டெல்லி தேர்தல் தோல்விக்கு பாஜக தலைவர்களே காரணம்: அமித்ஷா

கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 67 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதேநேரத்தில் பாஜக வெறும் மூன்று இடங்களை மட்டுமே வென்றது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.