இந்தியாவில் எத்தனை போலி சாமியார்கள்? பட்டியல் விவரம் இதே!!

சமீபத்தில், பல போலி சாமியார்கள் செய்திகள் வெளியாகி வருவது அனைவர்க்கும் தெரிந்ததே. இதையடுத்து, ஹிந்து சாமியார்களின் தலைமை அமைப்பான, அகில பாரதிய அகாரா பரிஷத், 14 போலி சாமியார்களின் பெயர்களை கடந்த செப்டம்பர் 10-ம் தேதி வெளியிட்டார். 

Last Updated : Dec 31, 2017, 12:48 PM IST
இந்தியாவில் எத்தனை போலி சாமியார்கள்? பட்டியல் விவரம் இதே!! title=

சமீபத்தில், பல போலி சாமியார்கள் செய்திகள் வெளியாகி வருவது அனைவர்க்கும் தெரிந்ததே. இதையடுத்து, ஹிந்து சாமியார்களின் தலைமை அமைப்பான, அகில பாரதிய அகாரா பரிஷத், 14 போலி சாமியார்களின் பெயர்களை கடந்த செப்டம்பர் 10-ம் தேதி வெளியிட்டார். 

அதில், குர்மீத் ராம் ரஹிம் சிங், ராதே மா, நிர்மல் பாபா, ராம்பால், ஆசாராம் பாபு, அவர் மகன் நாராயண் சாய் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், தற்போது மூன்று போலி சாமியார்களின் பெயர்கள் அடங்கிய 2வது பட்டியலை, சாமியார்களின் தலைமை அமைப்பு வெளியிட்டுள்ளது.

இதில், டெல்லியைச் சேர்ந்த, வீரேந்திர தீட்சித் கல்னேமி, உ.பி., மாநிலத்தை சேர்ந்த சச்சிதானந்த சரஸ்வதி, அலகாபாதைச் சேர்ந்த, திரிகல் பவந்த் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

17 போலி சாமியார் பட்டியல்:-

விரேந்திர தேவ் தீட்சித்
சச்சிதானந்த சரஸ்வதி
திரிகல் பவந்த்
ஆசாராம் பாபு
ராதே மா
சச்சிதானந்த கிரி
குர்மீத் ராம் ரஹிம் சிங்
சுவாமி ஓம்ஜி
நிர்மல் பாபா
இச்சாதரி பீமநந்த்
சுவாமி அசீமானந்த்
நாராயண் சாய்
ராம்பால்ஆச்சார்யா குஷ்முனி
பிரகாசபாதி கிரி
ஓம் நம சிவாய பாபா
மல்கான் சிங்

Trending News