பட்ஜெட் 2020: சம்பள வரியில் விலக்கு, எவ்வாறு பணத்தை சேமிப்பது?

இந்த ஆண்டுக்கான 2020 பட்ஜெட்டில் மாத வருமானத்தில் வரி விலக்கு அளிக்கப்படும் என எதிர்பார்ப்புகள்...!!

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Jan 16, 2020, 10:28 PM IST
பட்ஜெட் 2020: சம்பள வரியில் விலக்கு, எவ்வாறு பணத்தை சேமிப்பது?
Photo: Reuters

புதுடெல்லி: இந்த முறை பணவீக்கம் காரணமாக உயர்ந்துள்ள விலைவாசியை கருத்தில் கொண்டு மத்திய அரசு சில நிவாரணம் வழங்க முடியும். பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், உங்கள் சம்பளத்திற்கு வரி நிவாரணம் வழங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் பொருள் உங்கள் வருமானத்தில் இருந்து எடுக்கப்படும் வரி குறைந்தால், சேமிப்பு அதிகரிக்கும். எங்களுக்கு கிடைத்த தகவலின் படி, வருமான வரி விலக்குக்கு குறித்து  மத்திய அரசாங்கத்தின் மீது நிறைய அழுத்தம் உள்ளது. அதேவேளையில், வளர்ச்சியை விரைவுபடுத்த வரி செலுத்துவோருக்கு அரசாங்கம் வரி விலக்கு அளிக்க ஆலோசனை செய்து வருகிறது.

தொழில் நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரியை குறைத்து சலுகை அளித்தது போல, இந்த பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி செலுத்துவோருக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க உள்ளது என்று எதிர் பார்க்கப்படுகிறது. 80சி (80C) கீழ் முதலீட்டில் செய்யப்படும் விலக்குகளை 2.5 லட்சமாக மத்திய அரசாங்கம் உயர்த்த முடியும் என்று நம்பப்படுகிறது. மேலும், என்.எஸ்.சி.யில் (NSC) ரூ 50 ஆயிரம் வரை முதலீட்டையும் தள்ளுபடிக்கு உட்படுத்தலாம். பிபிஎஃப் (PPF) முதலீடு குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது.

சம்பள வரி செலுத்துவோருக்கு பட்ஜெட்டில் என்ன சாத்தியம்?
> 80 சி கீழ் விலக்கு வரம்பு ரூ .2.5 லட்சமாக உயர்த்தப்படலாம்.
> தற்போது, 80சி கீழ் முதலீட்டிற்கான விலக்கு வரம்பு 1.5 லட்சம் ரூபாய் ஆகும்.
> என்.எஸ்.சி-யில் 80 சி-யில் ரூ.50,000 வரை விலக்கு அளிக்க அளிக்க ஆலோசனை.
> பிபிஎஃப் முதலீட்டு வரம்பை ரூ .2.5 லட்சமாக உயர்த்தலாம்.
> தற்போது பிபிஎஃப் முதலீட்டில் வரி விலக்கு வரம்பு 1.5 லட்சம் ரூபாய் ஆகும்.
> என்.பி.எஸ் (NPS) விலக்கு வரம்பை ரூ.50000 லிருந்து ரூ .1 லட்சமாக உயர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை.

சம்பள வரி செலுத்துவோருக்கு விலக்கு ஏன் முக்கியம்?
> பொருளாதார நுகர்வுக்கு மக்கள் கைகளில் பணம் தேவை.
> 12வது நிதியாண்டில் சேமிப்பு வீதம் 23.6% ஆக இருந்தது. ஆனால் அது 18வது நிதியாண்டில் 17.2% ஆக குறைந்தது.
> சேமிப்பு வீதத்தை மேம்படுத்த, சேமிப்புக்கு ஊக்கத்தொகை வழங்குவது அவசியம்.
> முதலில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை, இப்போது தனிநபர் வருமானத்தில் சலுகை அளிக்கலாம்.

நடுத்தர மக்கள் பலன்:
> 10 லட்சம் வரை வருமானத்தில் 10% வரி அடுக்கு
> 80 சி கீழ் வரி விலக்கு ரூ.1.5 லிருந்து 2.5 லட்சமாக அதிகரிக்கும். 
> இப்போது 5 லட்சம் வரை வருமானத்திற்கு வரி இல்லை.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.