நாளொன்றுக்கு 1 லட்சம் கொரோனா வைரஸ் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்!!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 26) 'தடைகளை' நீக்கி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை பரிசோதிக்க வேண்டும் என்று பிரதமரை வலியுறுத்தினார். வயநாடு MP-யின் கூற்றுப்படி, நெருக்கடியைத் தோற்கடிக்க அரசாங்கம் தினசரி குறைந்தது ஒரு லட்சம் COVID-19 சோதனைகளை நடத்த வேண்டும் என பரிந்துரைத்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்கும் பரிசோதனையை நாள் ஒன்றுக்கு குறைந்தது ஒரு லட்சம் பேருக்கு நடத்த வேண்டும். அதற்கு இடையூறாக இருக்கும் தடைகளைத் தகர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். கடந்த பிப்ரவரியிலிருந்து கொரோனா வைரஸ் குறித்த எச்சரிக்கைகளை மத்திய அரசுக்கு கொடுத்து வந்தார் காங்கிரஸ் ராகுல் காந்தி. கொரோனா இந்தியாவுக்குள் வந்தபின் உடனடியாக ஊரடங்கை அறிவிக்கவும் வலியுறுத்தினார்.
ஊரடங்கால் கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருக்குமே தவிர, பரவுவதைத் தடுக்க இயலாது. ஆதலால், மக்களுக்குத் தீவிரமாக பரிசோதனை நடவடிக்கைகளை தொடர வேண்டும் என அவர் தெரிவித்தார். ஆனால் இப்போது நாள் ஒன்றுக்கு 40,000 முதல் 49000 பரிசோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில் அது போதாது என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளதாவது... “தீவிரமாகப் பரிசோதனை செய்வதுதான் கொரோனா வைரஸைத் தோற்கடிக்கும் ஆயுதம். இப்போது இந்தியாவில் நாள்தோறும் 40,000 கொரோனா பரிசோதனைகள் செயயப்படுகின்றன. இதை ஒரு லட்சமாக உயர்த்த வேண்டும்.
மக்களுக்கு அதிகமாக கொரோனா பரிசோதனை நடத்துவது தான் கொரோனாவை தடுக்கும் ஒரே வழி என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். நாள்தோறும் நாம் இப்போது செய்யும் 40 ஆயிரம் பரிசோதனைகளை ஒரு லட்சமாக அதிகரிக்க வேண்டும். பரிசோதனைக் கருவிகள் போதுமான அளவில் இருப்பு இருக்கிறது. பிரதமர் மோடி வேகமாகச் செயல்பட்டு , தடைகளைக் களைந்து பரிசோதனைகளை வேகப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Experts agree that mass random testing is the key to beating Corona. In India, a bottle neck is stopping us from scaling testing from the current 40,000 per day to 1 lakh tests a day, for which test kits are already in stock.
PM needs to act fast & clear the bottleneck.
— Rahul Gandhi (@RahulGandhi) April 26, 2020
நாட்டில் சீரற்ற சோதனைகளை அதிகரிக்க மத்திய அரசை காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இந்தியாவில் மொத்தம் 26,496 கோவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. நாட்டில் தொற்று காரணமாக 824 பேர் உயிர் இழந்துள்ளனர்.