காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்சித்தலைமைக்கு கடிதம் எழுதிய "G-23" எனப்படும் அதிருப்தித் தலைவர்களில் ஒருவர் ஆவார். கட்சியின் தலைமை மற்றும் அமைப்பை முழுமையாக மாற்றியமைக்க வேண்டுமென அவர்கள் தலைமைக்கு கடிதம் எழுதினர்.
கபில் சிபலின் ராஜ்யசபா எம்.பி. பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் முடிவடைகிறது. உத்தரப் பிரதேச சட்டசபையில், காங்கிரசுக்கு இரண்டு எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருப்பதால், அந்த மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவைக்கு யாரையும் தேர்ந்தெடுக்க முடியாது. இந்த நிலையில், ராஜ்யசபா தேர்தலில் சமாஜ்வாடி கட்சி ஆதரவுடன் போட்டியிட கபில் சிபல் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவர் வேட்புமனு தாக்கல் செய்தபோது சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் உடன் இருந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த 16-ம் தேதியே விலகி விட்டதாகக் கூறினார். "நான் இனி தீவிர காங்கிரஸ் தலைவர் அல்ல" எனவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார். நாடாளுமன்றத்தில் சுயேட்சையாக குரல் கொடுப்பது முக்கியம். ஒரு சுயேச்சை குரல் பேசினால் அது எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பு இல்லை என்று மக்கள் நம்புவார்கள்" என்று கூறிய கபில் சிபல், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதே தனது அடுத்த பணி எனவும் தெரிவித்தார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் 8 பேர் கொண்ட அரசியல் விவகாரக்குழுவை அமைத்து காங்கிரஸ் தலைமை நேற்று உத்தரவிட்டது. இந்த சூழலில் தான் கபில் சிபல் கட்சியில் இருந்து விலகியுள்ளார். கடந்த 5 மாதங்களில் மட்டும் 5 முக்கியத் தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.
மேலும் படிக்க | மோசமான நிலையில் காங்கிரஸ் கட்சி..! தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR