POK-விலிருந்து காஷ்மீர் வந்த குடும்பங்களுக்கு ரூ.5.5 லட்சம் வழங்க மோடி அரசு முடிவு

ஜம்மு-காஷ்மீருக்கான பிரதமரின் மேம்பாட்டு தொகுப்பு 2015" திட்டத்தின் கீழ் இடம்பெயர்ந்த காஷ்மீரிகளின் குடும்பத்திற்கு ஒரு முறை ரூ.5.50 லட்சம் நிதி அளிக்க முடிவு.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 9, 2019, 06:28 PM IST
POK-விலிருந்து காஷ்மீர் வந்த குடும்பங்களுக்கு ரூ.5.5 லட்சம் வழங்க மோடி அரசு முடிவு title=

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் இடம்பெயர்ந்த காஷ்மீரிகளின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5.5 லட்சம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மோடி அரசாங்கத்தின் இந்த முடிவால் சுமார் 5300 குடும்பங்களுக்கு பயன்பெரும் என்று கூறப்படுகிறது

2019 தீபாவளிக்கு முன்னரே, மத்திய அரசு ஊழியர்களுக்கு (Central Govt Employees) அகவிலைப்படி (Dearness Allowance) 5 சதவீதம் உயர்த்தி ஒரு பெரிய பரிசை மத்திய அரசு அளித்தது. இதனையடுத்து  மோடி தலைமையிலான (Modi Govt) அரசு காஷ்மீர் மக்களுக்கு மிகப்பெரிய பரிசு வழங்க முடிவு செய்துள்ளது. அதாவது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) இருந்து காஷ்மீருக்கு வந்தவர்களுக்கும், காஷ்மீர் பிராந்தியத்திற்கு வெளியே குடியேறியவர்களுக்கு ஒரு பெரிய சலுகையை அறிவித்துள்ளது. அதாவது இதுபோன்ற இடம்பெயர்ந்த காஷ்மீரிகளின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5.5 லட்சம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. மோடி அரசாங்கத்தின் இந்த முடிவால் சுமார் 5300 குடும்பங்களுக்கு பயன்பெரும் என்று கூறப்படுகிறது

2015-ல் அறிவிக்கப்பட்ட பிரதமரின் நிதி உதவி திட்டத்தின் கீழ் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று (புதன்கிழமை) ஒப்புதல் அளித்து. இந்த ஒப்புதல் இடம் பெயர்ந்த குடும்பங்களுக்கு தற்போதுள்ள "ஜம்மு-காஷ்மீருக்கான பிரதமரின் மேம்பாட்டு தொகுப்பு 2015" திட்டத்தின் கீழ் ரூ.5.50 லட்சம் ஒரு முறை நிதி உதவி பெற தகுதியுடையவர்களாக இருப்பார்கள். 

இந்த புனர்வாழ்வு தொகுப்புக்கு (Rehabilitation Package) நவம்பர் 30, 2016 அன்று அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

Trending News