தேர்தலுக்கு பிந்திய கருத்துகணிப்புகளை நம்ப வேண்டாம்; வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்!
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்றோடு முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்திய கருத்துகணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. அந்த வகையில் மத்தியில் ஆளும் பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறப்படுகிறது.
எனினும் தமிழத்தை பொருத்தவரையில் தான் கூட்டணி அமைத்துள்ள அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு தமிழகத்தில் 6 இடங்கள் வரையே கிடைக்கும் என தேர்தலுக்கு பிந்திய கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன.
I don’t trust Exit Poll gossip. The game plan is to manipulate or replace thousands of EVMs through this gossip. I appeal to all Opposition parties to be united, strong and bold. We will fight this battle together
— Mamata Banerjee (@MamataOfficial) May 19, 2019
இந்நிலையில் தேர்தலுக்கு பிந்திய கருத்துகணிப்பு குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ள மேற்கு வங்க முதல்வரும், திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவிக்கையில்., "கருத்துகணிப்புகளை நம்ப வேண்டாம். இந்த போலி கருத்துகணிப்பு வதந்திகளை நம்புகையில் மேலும் ஆயிரம் வாக்குபதிவு இயந்திரங்கள் மாற்றப்படலாம். இத்தகைய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க எதிர்கட்சிகள் ஒன்றுபட வேண்டும். ஒன்றுப்பட்டால் வெற்றி நிச்சையம் என தளராமல் இருப்போம்" என தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தை பொருத்தவரையில் மம்தா தலைமையிலான திரினாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக-விற்கும் இடையேயான போட்டி என இருமுனை போட்டி நிலவியது. தற்போது வெளியாகியுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்தகணிப்பின் படி பாஜக 18-லிருந்து 26 தொகுதிகள் வரை வெற்றி பெறலாம் எனவும், மம்தா தலைமையிலான திரினாமூல் காங்கிரஸ் 13-லிருந்து 21 தொகுதிகள் வரை வெற்றி பெறலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.