விரைவில் டிரைவிங் லைசென்சுடன் ஆதார் எண்ணை இணைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் அவசியம் என மத்திய அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பான் எண்ணுடன், ஆதாரை இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டு அதன் இதற்கான காலக்கெடு டிசம்பர் வரை நீடித்துள்ளது.
அந்த வகையில் டிஜிட்டல் ஹரியானா மாநாட்டில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசுகையில், டிரைவிங் லைசென்சுடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என கூறினார். இது குறித்து மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரியுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும், டிஜிட்டல் தொழில்நுட்ப உதவியுடன், ஒருவரின் டிஜிட்டல் அடையாளத்தையும், அங்க அடையாளத்தையும் ஒப்பிட முடியும் என்றும் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.