தேசியக் கொடிக்கு தனி மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என்பதோடு தேசிய கொடியை எங்கு பயன்படுத்த வேண்டும், எப்படி பயன்படுத்துவது என்பது தொடர்பான விதிமுறைகள் உள்ளன.
இந்நிலையில், மின்னணு வர்த்தக நிறுவனமான (e-commerce ) அமேசான் இந்தியா நிறுவனம் தேசிய கொடி அச்சிடப்பட்ட 'கீ செயின்', சாக்லெட், கோப்பைகள், ஆடைகள், காலணிகள் ஆகியவற்றின் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. குடியரசு தினத்தை முன்னிட்டு அமேசானில் மூவர்ண அச்சுடன் கூடிய பல பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும்m நிலையில், இது தேசிய கொடி அவமதிக்கும் செயல் என சமூக வலைதளங்களில் அமேசானுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
நாடு தனது 73வது குடியரசு தினத்தை கொண்டாடும் நிலையில், தேசிய கொடியை அவமரியாதை செய்த இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் மீது வழக்கு தொடுக்கும்படி காவல் துறை அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளதாக மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறினார்.
போபால் காவல்துறையின் குற்றப் பிரிவு, அமேசான் தளத்தின் அடையாளம் தெரியாத விற்பனையாளர்கள் மீது நகரவாசி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்தது.
ALSO READ | Watch Video: நேதாஜியின் மின் ஒளி சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
"புகாரைத் தொடர்ந்து, போபாலின் குற்றப்பிரிவு, அமேசான் மற்றும் அடையாளம் தெரியாத விற்பனையாளர்களுக்கு எதிராக தேசிய மரியாதை (திருத்தம்) சட்டத்தின் பிரிவு 2 மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505 (2) ஆகியவற்றின் கீழ் FIR பதிவு செய்துள்ளது. மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக போபால் காவல்துறை ஆணையர் மக்ரந்த் தேயுஸ்கர் பிடிஐயிடம் தெரிவித்தார்.
இதையடுத்து தேசிய கொடியுடன் பொருட்களை விற்பனை செய்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக அமேசான் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | 75 ஆண்டுகளில் முதன்முறையாக குடியரசு தின அணிவகுப்பு 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்கும்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR