முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு

பாராளுமன்றத்தின் மேல் சபைக்கு மன்மோகன் சிங் இன்று தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 19, 2019, 04:24 PM IST
முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு title=

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராக இன்று (திங்கள்கிழமை) தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து காங்கிரஸ் சார்பில் மன்மோகன் சிங் மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் போட்டியிட்டார். அவர் ஜெய்பூரில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு பரிசீலனை செய்யப்பட்டு ஏற்கப்பட்டது. ஆனால் அவரை எதிர்த்து யாரும் போட்டியிடததால், இன்று அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாராளுமன்றத்தின் மேல் சபைக்கு மன்மோகன் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு, ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் வாழ்த்து தெரிவித்தார்.

காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னால் பிரதமர் மன்மோகன் சிங்கை எதிர்த்து பாஜக எந்தவொரு வேட்பாளரையும் நிறுத்தவில்லை. மாநிலங்களவை எம்.பி. மதன் லால் சைனியின் மரணத்தை அடுத்து, இந்த தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

Trending News