மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஜி.எஸ்.டி., வரி விகிதம் 5%, 12% ,18%, 28% என நான்கு அடுக்கு வரி விகிதமாக நிர்ணயம் செய்ய கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அருண் ஜெட்லி கூறியதாவது:- தற்போது ஜி.எஸ்.டி., மசோதா திட்டமிட்டபடி தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த மசோதா அமல் படுத்தப்பட்டால் முதல் வருடத்தில் மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்புகளை சரி செய்ய ரூ.50 ஆயிரம் கோடி தேவைப்படும். பொது மக்கள் பயன்படுத்தும் உணவு பொரு ட்களுக்கு வரி விதிக்கப்படாது. பொது மக்கள் அதிகம் வாங்கும் பொருட்களுக்கு 5% மட்டுமே வரி விகிக்கப்படும். குடிநீர் பானங்கள், பான் மசாலா, ஆடம்பர கார்கள், ஆகியவற்றி ற்கு 28% வரி விதிக்கப்படும்.மேலும் 30 முதல் 31 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்ட பொருட்களுக்கு 28% வரி விதிக்கப்படும். புகையிலை பொருட்களுக்கு 40% வரி விதிக்கப்படும். தங்கத்தின் மீதான சரக்கு மற்றும் சேவை வரி பின்னர் முடிவு செய்யப்படும் எனவும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரிவிதிப்பை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரி மசோதா சட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது என கூறினார்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் 2 நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தில் தமிழகம் சார்பில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் மற்ற மாநில நிதியமைச்சர் களும் பங்கேற்கின்றன.