நெடுஞ்சாலை பணிகளில் பங்கேற்க சீன நிறுவனங்களுக்கு இனி அனுமதியில்லை: கட்கரி

இந்தியாவில் நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்பதை அனுமதிக்க மாட்டோம் என நிதின் கட்கரி திட்டவட்டம்..!

Last Updated : Jul 1, 2020, 07:28 PM IST
நெடுஞ்சாலை பணிகளில் பங்கேற்க சீன நிறுவனங்களுக்கு இனி அனுமதியில்லை: கட்கரி title=

இந்தியாவில் நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்பதை அனுமதிக்க மாட்டோம் என நிதின் கட்கரி திட்டவட்டம்..!

இந்தியாவில் நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்பதை அனுமதிக்க மாட்டோம் என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கூட்டுத்திட்டமாக இருந்தாலும் நெடுஞ்சாலை பணிகளில் அனுமதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கூட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்க இந்தியா அனுமதிக்காது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி புதன்கிழமை தெரிவித்தார். மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) போன்ற பல்வேறு துறைகளில் சீன முதலீட்டாளர்கள் மகிழ்விக்கப்படுவதில்லை என்பதை உறுதி செய்யும் என்றும் கடக்ரி கூறினார்.

சாலை கட்டுமானத்திற்கு சீன பங்காளர்களைக் கொண்ட கூட்டு முயற்சிகளுக்கு நாங்கள் அனுமதி வழங்க மாட்டோம். அவர்கள் (சீன நிறுவனங்கள்) எங்கள் நாட்டில் கூட்டுத் தொழில் வழியாக வந்தால் நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம் என்று நாங்கள் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளோம்” என்று கட்கரி செய்தி நிறுவனமான பி.டி.ஐ யிடம் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில்.... ''சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களில் சீன நிறுவனங்கள் முதலீடு செய்யாத வகையில் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறோம்'' என்றார். இந்தியாவில் செயல்பட்டு வரும் 59 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்தது. குறிப்பாக TIKTOK, Hlo ஆகிய செயலிகளை உடனடியாக கூகுள் குரோமில் இருந்தும், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்தும் மத்திய அரசு நீக்கியது. இதற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்களை இந்தியர்கள் தெரிவித்து இருந்தனர்.

மேலும் அவர் கூறுகையில், ''இந்திய நெடுஞ்சாலை பணிகளில் சீன நிறுவனங்களை நேரடியாகவோ அல்லது கூட்டு சேர்ந்தோ ஈடுபட அனுமதிக்க மாட்டோம். விரைவில் சீன நிறுவனங்கள் இந்திய நெடுஞ்சாலைப் பணிகளில் ஈடுபட முடியாத அளவிற்கு சிறப்பு விதிமுறைகளை வெளியிட இருக்கிறோம். புதிய விதிமுறைகள் தற்போதைய மற்றும் எதிர்கால டெண்டர்களில் அமல்படுத்தப்படும். முன்பு விடப்பட்ட டெண்டர்களுக்கு இது பொருந்தாது. தற்போது விடப்பட்டு இருக்கும் டெண்டர்களில் சீன நிறுவனங்கள் இருப்பது கண்டறியப்பட்டால் மீண்டும் டெண்டர் விடப்படும்.

READ | கொரோனில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.... COVID-யை குணப்படுத்தாது..!

நம் நாட்டு நிறுவனங்கள் டெண்டர்களை எடுக்கும் வகையில் விதிமுறைகளை எளிதாக்குமாறு நெடுஞ்சாலைத்துறை செயலாளர் கிரிதர் அறமன் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை தலைவர் எஸ். எஸ். சந்துவை கேட்டுக் கொண்டுள்ளேன். தொழில்நுட்ப ரீதியிலான தளர்வுகள், நிதி தொடர்பான தளர்வுகளை மேற்கொள்ள கூட்டத்தை கூட்டி ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன். அப்போது தான் நம் நாட்டு நிறுவனங்கள் தொழிலில் ஈடுபட தகுதி வாய்ந்தவையாக இருக்கும். சிறிய காண்ட்ராக்டர் ஒருவர் சிறிய ஒப்புதலில் ஈடுபட்டு இருந்தால், அவரே பெரிய டெண்டர்களில் ஈடுபடுவதற்கு தகுதி பெறுகிறார். தற்போது இருக்கும் விதிமுறைகள் முறையானதாக இல்லை. எனவே, அவற்றை மாற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். இதன் மூலம் இந்திய நிறுவனங்களை நாம் ஊக்குவிக்க முடியும்.

ஒருவேளை தொழில்நுட்பம், டிசைன் ஆகியவற்றில் இந்தியா வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்தாலும், சீன நிறுவனங்களுடன் இணைய மாட்டோம். வெளிநாட்டு முதலீடுகள் ஊக்குவிக்கப்படும் என்றபோதும், சீன முதலீடு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வது குறைக்கப்படும். சீனப் பொருட்களுக்கு ஆர்டர் செய்து இருக்கும் இந்திய நிறுவனங்கள் இரண்டு, மூன்று மாதங்களுக்குள் பொருட்கள் கிடைக்குமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் ஆர்டர் செய்து துறைமுகங்களில் நீண்ட நாட்கள் சிக்கி இருக்கும் பொருட்களை விரைவில் விடுவிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் இருவரிடமும் கேட்டுக் கொண்டுள்ளேன்'' என்றார்.

Trending News