சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு; அதிர்ச்சியில் மக்கள்!

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ₹2.89 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலைஉயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 1, 2018, 08:25 AM IST
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு; அதிர்ச்சியில் மக்கள்! title=

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ₹2.89 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலைஉயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பை பொறுத்து, பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சமையல் எரிவாயுவின் விலையும் தற்போது உயர்ந்துள்ளது.

இந்நிலையில், மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை ₹59 உயர்த்தப்பட்டுள்ளது. மானிய விலை எரிவாயு சிலிண்டரின் விலை ₹2.89 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது, இதன் காரணமாக மானிய விலை எரிவாயு சிலிண்டரின் விலை ₹502.4 -ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

விலை உயர்த்தப்பட்டிருப்பதால், மானியம் பெறும் பயனாளிகளுக்கு வங்கியில் செலுத்தப்படும் தொகை ₹376.60 காசுகளாக உயர்த்தப்படுகிறது. கடந்த மாதம் வரை இந்த மானியத் தொகை 320 ரூபாய் 49 காசுகளாக இருந்தது.

மேலும் சமையல் எரிவாயு சிலிண்டரில், நீர்ம பெட்ரோலியத்தோடு, 20% மெத்தனால் கலந்து விநியோகிக்க, மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இதனால் சிலிண்டர் விலை ₹100 வரை குறைய வாய்ப்பு உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது!

Trending News