ஜோக்பானி-ஆனந்த் விஹார் விரைவு ரயில் விபத்து; 6 பேர் உயிரிழப்பு....

பீகாரின் ஜோக்பானி என்ற இடத்தில் இருந்து டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் வரை சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் வண்டி எண் 12487 என்ற ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

Last Updated : Feb 3, 2019, 07:57 AM IST
ஜோக்பானி-ஆனந்த் விஹார் விரைவு ரயில் விபத்து; 6 பேர் உயிரிழப்பு.... title=

பீகாரின் ஜோக்பானி என்ற இடத்தில் இருந்து டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் வரை சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் வண்டி எண் 12487 என்ற ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயில் இன்று அதிகாலை 3:58 மணியளவில் பீகார் மாநிலம் வைஷாலி அருகே உள்ள ஷகாதை பஸர்க் என்ற இடத்தில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயிலின் S8, S9, S10, one general மற்றும் ஒரு AC B3 பெட்டிகள் தடம்புரண்டதில் அதில் பயணித்த 6 பேர் உயிரிழந்தனர். ஏராளமான பயணிகள் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

விபத்தைத் தொடர்ந்து சோனாப்பூர் மற்றும் பராவுனி பகுதியில் இருந்து மருத்துவர்களும், மீட்புக் குழுவினரும் விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் விபத்துக்குள்ளான இடத்தில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். 

சோன்பூர் மற்றும் பராயூனி பகுதிகளில் இருந்து டாக்டர்கள் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வரவழைத்துள்ளனர். விபத்துக்கான இந்திய ரயில்வே ஹெல்ப்லைன் எண்களை வெளியிட்டுள்ளது - சோன்பூர் - 06158221645; ஹஜிப்பூர் - 06224272230 மற்றும் பராயுனி - 0627923222. 

 

Trending News