மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, வியாழக்கிழமை மகாராஷ்டிர அரசியலுக்கு திரும்ப மறுத்துள்ளார்.
மேலும் மத்திய அரசில் அங்கமாய் இருப்பதையே தான் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அதிரடி அறிவிப்பின் மூலம், மாநிலத்தில் முதலமைச்சருக்கு அவரது பெயர் முன்மொழியப்படுவதற்கான ஊகங்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தொடர்ந்து மாநிலத்தில் அமையவிருக்கும் ஆட்சி குறித்து பேசிய அவர்., மாநிலத்தில் தேவேந்திர ஃபட்னவிஸ் தலைமையில் சிவசேனாவுடன் பாஜக ஒரு நிலையான அரசாங்கத்தை அமைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய கட்கரி, "எங்களுக்கு சிவசேனா ஆதரவு கிடைக்கும், நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பாஜக-சிவசேனா இடையேயான மோதலைத் தீர்ப்பதற்கான RSS மத்தியஸ்தம் குறித்து, மகாராஷ்டிராவில் அரசாங்கம் அமைப்பதில் சங்கத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
288 உறுப்பினர்களை கொண்டு மகாராஷ்டிரா மக்களவை தேர்தலில் பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் பெற்றது. எனினும் இதுவரையில் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் தலைமை குறித்து முடிவு உறுதிபடுத்தப்படவில்லை.
குறிப்பிடத்தக்க வகையில், மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட சிவசேனாவும், பாஜக-வும், இடப் பகிர்வு தொடர்பாக ஒருவருக்கொருவர் கடுமையான சண்டையில் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே, மாநிலத்தில் புதிய அரசாங்கத்தை அமைப்பதில் தாமதம் நீடிக்கிறது.
சிவசேனா 50:50 சூத்திரத்தின் கீழ் ஒரு கூட்டணி அரசாங்கத்தை வைத்திருப்பதில் பிடிவாதமாக உள்ளது, அதன்படி இரு கட்சிகளும் தலா 2.5 ஆண்டுகளுக்கு ஒரு முதலமைச்சரைக் கொண்டிருக்க வேண்டும் என சிவசேனா நிர்பந்திக்கிறது. இருப்பினும், மகாராஷ்டிராவின் தனிபெரும் கட்சாயக உருவெடுத்துள்ள பாஜக, 50:50 சூத்திரத்தை கைவிட்டு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக நியமிக்க வேண்டும் என பிடிவாதம் காட்டி வருகிறது.
சச்சரவுக்கு மத்தியில், பாஜகவும், சிவசேனாவும் அரசாங்கத்தை அமைப்பதற்கான உரிமை கோரலுக்கு வெளிப்புற ஆதரவை எதிர்பார்த்து வருகின்றன. இதனிடையே இன்று இரு கட்சிகளுக்கும் இடையே உள்ள முரன்பாடுகளை கலைய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, RSS மத்தியஸ்தம் நாடியிருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடன் பேசிய கட்கரி., "மகாராஷ்டிரா விரைவில் ஒரு அரசாங்கத்தை உருவாக்கும் என்று நான் நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் "தாங்கள் சிவசேனாவின் ஆதரவைப் பெறுவோம் என்றும், இதற்காக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும்" அவர் குறிப்பிட்டுள்ளார்.