விரைவில் பாஜக ஆளும் மாநிலங்களில் NCR பட்டியல் வரலாம்...!

சில வாரங்களுக்கு முன்னர் அசாமில் வெளியிடப்பட்ட NCR கடைசி பட்டியலுக்குப் பிறகு, NCR பிரச்சினை நாடு முழுவதும் சூடாகியுள்ளது.

Last Updated : Oct 1, 2019, 11:59 AM IST
விரைவில் பாஜக ஆளும் மாநிலங்களில் NCR பட்டியல் வரலாம்...! title=

சில வாரங்களுக்கு முன்னர் அசாமில் வெளியிடப்பட்ட NCR கடைசி பட்டியலுக்குப் பிறகு, NCR பிரச்சினை நாடு முழுவதும் சூடாகியுள்ளது.

இந்நிலையில் பாஜக ஆளும் பல மாநிலங்களில் NCR-யை தாங்களாகவே செயல்படுத்துவது பற்றி பேச்சு நடைப்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் NCR-யை செயல்படுத்துவது குறித்து உள்துறை அமைச்சர் ஷா அவர்களே பேசியுள்ளார். இப்போது, ​​நாட்டின் மக்கள்தொகையைப் பொறுத்தவரை மிகப்பெரிய மாநிலம் உ.பி., NCR இங்கே செயல்படுத்தத் தயாராகியுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்டங்களின் போலீஸ் கேப்டன்களுக்கும், ஐ.ஜி., டி.ஐ.ஜி வரம்பு மற்றும் ஏ.டி.ஜி மண்டலம் ஆகியவற்றுக்கு கடிதம் அனுப்பப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

NCR-க்காக டி.ஜி.பி தலைமையகம் தயாரித்த வரைவு, ரயில் நிலையம் மற்றும் பஸ் ஸ்டாண்ட், சாலையோரம் மற்றும் பங்களாதேஷ் மற்றும் பிற வெளிநாட்டினர் சட்டவிரோதமாக தஞ்சம் புகுந்த அனைத்து மாவட்டங்களின் புறநகரில் உள்ள புதிய குடியிருப்புகளை அடையாளம் காணும். இந்த சரிபார்ப்பு பணியின் வீடியோ பதிவு எச்சரிக்கையுடன் செய்யப்படும். விசாரணையில், சம்பந்தப்பட்ட நபர் தனது முகவரியை பிற மாநிலங்கள், மாவட்டங்களில் வெளிப்படுத்தினால், அது சரியான நேரத்தில் சரிபார்க்கப்படும்.

மேலும், வெளிநாட்டினர் தங்குவதை ஒழுங்குபடுத்துவதற்காக என்ன போலி பதிவுகள் மற்றும் வசதிகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதையும் காவல்துறையினர் கண்டுபிடிப்பார்கள். 

இந்த பரிசோனையில் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆயுத உரிமம், பாஸ்போர்ட் மற்றும் ஆதார் அட்டை ஆகியவை இடம்பெறலாம். இந்த சோதனையில் போலி பதிவுகள் மற்றும் வசதிகள் குறித்த தகவல்கள் கசிந்தால், அவற்றை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு, இந்த வசதிகளை வழங்கும் இடைத்தரகர்கள் மற்றும் துறை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிரோத வெளிநாட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு தங்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்.

பிற மாநிலத்தவர், பிற நாட்டவர் இந்த NCR முறையில் பாதிக்கப்படுவர் என்ற போதிலும், அசாம் NCR இறுதி பட்டியல் உள்நாட்டு மக்களையும் பாதிப்புக்குள்ளாகியது நாடு முழுவதும் பேரதிற்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது பிற மாநிலங்களில் NCR கொண்டுவரப்படும் என்ற தகவல் அதிர்ச்சியளிக்கும் ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது

Trending News