OLA Store: 15 நிமிடங்களில் மளிகை சாமன்கள் உங்கள் வீடு தேடி வரும்..!!

(OLA) நிறுவனம் மளிகை சாமான்கள் மற்றும் இதர வீட்டு தேவை பொருட்களை டெலிவரி செய்யும் சேவையைத் தொடக்கியுள்ளது. இதன் மூலம் e-commerce, (quick-commerce) பிரிவில் காலடி வைத்துள்ளது.   

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 6, 2021, 07:26 AM IST
  • ஓலா தனது 'ஓலா ஸ்டோரை' பெங்களூரில் ஒரு சில முக்கிய இடங்களில் தொடங்கியுள்ளது
  • வரும் மாதங்களில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
  • 15 நிமிடங்களுக்குள் பொருட்களை டெலிவரி செய்வதை இலக்காகக் கொண்டுள்ளது.
OLA Store: 15 நிமிடங்களில்  மளிகை சாமன்கள் உங்கள் வீடு தேடி வரும்..!! title=

புதுடெல்லி:  ஆன்லைன் டாக்ஸி புக்கிங் சேவை வழங்கும் ஓலா (OLA) நிறுவனம் இப்போது பெங்களூரில் மளிகை சாமான்கள் மற்றும் இதர வீட்டு தேவை பொருட்களின்  மற்றும் செல்லப்பிராணிகளுக்கான தயாரிப்புகள் போன்ற பொருட்களை டெலிவரி செய்யும் சேவையைத் தொடக்கியுள்ளது. இதன் மூலம் e-commerce, (quick-commerce) பிரிவில் காலடி வைத்துள்ளது. 

ஓலா தனது இந்த புதிய முயற்சியான 'ஓலா ஸ்டோரை' ( (Ola Store) பெங்களூருவில் ஒரு சில முக்கிய இடங்களில் தொடங்கி, அதன்பின் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் வரும் மாதங்களில் விரிவுபடுத்த உள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. ஆன்லைன் ஸ்டோர் மூலம், வீட்டில், அவ்வப்போது தேவைப்படும் குறைந்த அளவிலான பொருட்களையும் விரைவில் பெறலாம். 15 நிமிடங்களுக்குள், பொருட்களை டெலிவரி செய்வதை இலக்காக கொண்டு  இந்த ஆன்லைன்  ஓலா ஸ்டோர் தொடங்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஓலா செயலியின் மூலம் இந்த சேவை கிடைக்கும் என்றும், பெங்களூருவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை வழங்கப்படுவதாகவும் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.

ALSO READ | ஓலா தீபாவளி சேல் துவங்குகிறது: இந்த தேதி முதல் டெஸ்ட் டிரைவ் துவக்கம்

மளிகை பொருட்கள், பானங்கள், வீடு தேவை பொருட்கள் மற்றும் செல்லப்பிராணி பராமரிப்பு பொருட்கள் உட்பட பல வகைகளில் கிட்டத்தட்ட 2,000 பொருட்களை வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்ய முடியும். நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள  கடைகளின் மூலம் இந்த சேவை வழங்கப்படும் என்று வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

பாரம்பரிய e-காமர்ஸ் டெலிவரிகள் ஒரு நாள் அல்லது அதற்கு மேல் எடுக்கும் போது, ​​விரைவாக டெலிவரி வர்த்தகம் ( q-commerce) வாடிக்கையாளர்களின் அன்றாட தேவைகள் மளிகை சமான்கள் மற்றும் பிற வீட்டு தேவைப் பொருட்களை பொருட்களை,  குறுகிய நேரத்தில் பெற உதவுகிறது. இந்த வர்த்தக பிரிவில் உள்ள Dunzo மற்றும் Swiggy Instamart ஆகியோர் களத்தில் உள்ளனர்.

இந்தியாவில் விரைவு வர்த்தகத் துறை (quick commerce sector) தற்போதைய 0.3 பில்லியனில் இருந்து 2025 ஆம் ஆண்டளவில் 5 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என RedSeer வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

பெரிய அளவில், மாதாந்திர தேவை பொருட்களை வாங்குவதை விட, மளிகை சாமான்கள், காய்கறிகள் போன்றவற்றையும், எதிர்பாராத விதமாக அல்லது திடீரென தேவைப்படும் அன்றாட தேவைக்கான பொருட்களையும் சிறிய அளவில் வாங்கும் போக்கு அதிகரித்துள்ள நிலையில்,  BigBasket மற்றும் Grofers  ஆகியவை குறுகிய நேரத்தில் டெலிவரியை வழங்குகின்றன

ஓலாவின் தாய் நிறுவனமான ANI டெக்னாலஜிஸ், உணவு விநியோகம் மற்றும் நிதிச் சேவைகளை வழங்குகிறது. நுகர்வோர் வாகனங்களை வாங்குவதற்கு வசதியாக Ola Cars என்ற வாகன வர்த்தக தளத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News