பிரதமர் நரேந்திர மோடியின் சவுதி அரேபியா பயணத்திற்கு அவரது விமானம் பாகிஸ்தானின் வான்வெளியில் பறக்க அனுமதிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை பாகிஸ்தான் மறுத்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் ஷா மஹ்முத் குரோஷி வெளியிட்டுள்ள அறிக்கையில்., பிரதமர் மோடியை நாட்டின் வான்வெளியைப் பயன்படுத்த பாகிஸ்தான் அனுமதிக்காது என குறிப்பிட்டுள்ளார். இந்த முடிவு குறித்து இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகருக்கு எழுத்துப்பூர்வ வடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் குரேஷி குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி திங்களன்று சவுதி அரேபியாவுக்குச் சென்று சர்வதேச வர்த்தக மன்றத்தில் கலந்து கொள்ளவும், எண்ணெய் வளமுள்ள இஸ்லாமிய தேசத்தின் மூத்த தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.
முன்னதாக., அமெரிக்காவில் நடைபெற்ற ஐ.நா பொதுச் சபையில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடியின் விமானத்தை தனது விண்வெளியைப் பயன்படுத்த கடந்த செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் மறுத்துவிட்டது என்பதை இந்த தருணத்தில் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
அதேப்போல் செப்டம்பர் மாதம் ஐஸ்லாந்துக்கு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் விமானம் செல்வதற்காக தனது வான்வெளியைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றஇந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தது.
இந்நிலையில்., இஸ்லாமாபாத்தின் முடிவை வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கடுமையாக எதிர்த்துள்ளார். நன்கு நிறுவப்பட்ட சர்வதேச நடைமுறையில் இருந்து விலகுவதற்கான தனது முடிவை பாகிஸ்தான் பிரதிபலிக்க வேண்டும் என்றும் ஒருதலைப்பட்ச நடவடிக்கை எடுப்பதற்கான காரணங்களை தவறாக சித்தரிக்கும் பழைய பழக்கத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து ரவீஷ் குமார் தெரிவிக்கையில்., "VVIP சிறப்பு விமானத்திற்கான பயணத்தை இரண்டு வாரங்களில் இரண்டாவது முறையாக மறுக்க பாகிஸ்தான் அரசு எடுத்த முடிவுக்கு நாங்கள் வருந்துகிறோம். இந்த அனுமதி எந்தவொரு சாதாரண நாட்டினாலும் வழக்கமாக வழங்கப்படுகிறது. நன்கு நிறுவப்பட்ட சர்வதேச நடைமுறையிலிருந்து விலகுவதற்கான தனது முடிவை பாகிஸ்தான் பிரதிபலிக்க வேண்டும்., அத்துடன் ஒருதலைப்பட்ச நடவடிக்கை எடுப்பதற்கான காரணங்களை தவறாக சித்தரிக்கும் அதன் பழைய பழக்கத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.