டெல்லி-அமிர்தசரஸ் இடையே அதிவேக நெடுஞ்சாலை; 25,000 கோடி ஒதுக்கீடு...

டெல்லியில் இருந்து அமிர்தசரஸ் அல்லது அமிர்தசரஸில் இருந்து டெல்லி செல்வதற்கு சாலை வழியாக பயணிப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது.

Last Updated : Jun 3, 2020, 08:24 AM IST
  • டெல்லி-அமிர்தசரஸ்-கத்ரா அதிவேக நெடுஞ்சாலையின் (அமிர்தசரஸ்-கத்ரா அதிவேக நெடுஞ்சாலை) ஒரு பகுதியாக புதிய பாதை அமைக்கப்படும்.
  • இந்த பாதை நகோதர் ,சுல்தான்பூர் லோதி, கோயிண்ட்வால் சாஹிப், கதூர் சாஹிப் வழியாக செல்லும். இந்த அதிவேக நெடுஞ்சாலை சீக்கியர்களின் ஐந்து குருக்களுடன் தொடர்புடைய நகரங்களை இணைக்கும்.

Trending Photos

டெல்லி-அமிர்தசரஸ் இடையே அதிவேக நெடுஞ்சாலை; 25,000 கோடி ஒதுக்கீடு... title=

டெல்லியில் இருந்து அமிர்தசரஸ் அல்லது அமிர்தசரஸில் இருந்து டெல்லி செல்வதற்கு சாலை வழியாக பயணிப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது.

ஆம், இந்த இரு நகரங்களுக்கு இடையேயான 8 மணி நேர பயணம் இனி நான்கு மணி நேரத்தில் முடிவடையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  டெல்லி-அமிர்தசரஸ் அதிவேக நெடுஞ்சாலையின் கீழ், அமிர்தசரஸுக்கு புதிய இணைப்பு வழியை உருவாக்குவது குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

READ | சார்தாம்சாலை திட்டம், எல்லை சாலை அமைப்பின் முத்தான பணி என அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டு

இந்த பாதை நகோதர் வழியாக சுல்தான்பூர் லோதி, கோயிண்ட்வால் சாஹிப், கதூர் சாஹிப் வழியாக செல்லும். இந்த திட்டத்தின் மூலம், பஞ்சாப் மக்களின் நீண்டகால கோரிக்கையும் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதன் மூலம், அமிர்தசரஸிலிருந்து டெல்லி சர்வதேச விமான நிலையத்தை வெறும் 4 மணி நேரத்தில் அடைய முடியும். அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்ட கட்டுமானத்திற்கு ரூ.25,000 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

டெல்லி-அமிர்தசரஸ்-கத்ரா அதிவேக நெடுஞ்சாலையின் (அமிர்தசரஸ்-கத்ரா அதிவேக நெடுஞ்சாலை) ஒரு பகுதியாக புதிய பாதை அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த பாதை நகோதர் ,சுல்தான்பூர் லோதி, கோயிண்ட்வால் சாஹிப், கதூர் சாஹிப் வழியாக செல்லும். இந்த அதிவேக நெடுஞ்சாலை சீக்கியர்களின் ஐந்து குருக்களுடன் தொடர்புடைய நகரங்களை இணைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமிர்தசரஸ் முதல் குர்தாஸ்பூர் சாலையும் முழுமையாக உருவாக்கப்பட்டு 'சிக்னல் ஃப்ரி' ஆக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

READ | டெல்லி-மும்பை பெருநகரங்களுக்கு இடையிலான தூரத்தை 220 KM குறைக்கும்: நிதின் கட்கரி

இந்த புதிய பாதை அமிர்தசரஸூக்கு ஒரு குறுகிய பாதையை வழங்குவது மட்டுமல்லாமல், சுல்தான்பூர் லோதி, கோயிண்ட்வால் சாஹிப், கதூர் சாஹிப் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட தேரா பாபா நானக்-கர்த்தார்பூர் சாஹிப் சர்வதேச தாழ்வாரம் போன்ற பிற மத இடங்களையும் இணைக்கும்.

பாரத்மாலா திட்டத்தின் கீழ் இந்த டெல்லி-அமிர்தசரஸ்-கத்ரா அதிவேக நெடுஞ்சாலையை உருவாக்கி வருவதாகவும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Trending News