கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலையை ரூ.2 குறைத்து அம்மாநில முதல்வர் குமாரசாமி உத்தரவு....!
பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து சாதாரண மக்களையும், வாகன ஓட்டிகளையும் வதைத்து வருகிற நிலையில், இது தொடர்பாகவோ, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பற்றியோ பிரதமர் நரேந்திர மோடியும் சரி, பிற மத்திய மந்திரிகளும் சரி வாய் திறக்காமல் மவுனம் காத்து வருவது எதிர்க்கட்சிகளின் சாடலுக்கு வழி வகுத்து உள்ளது.
இன்று சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 85.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.00 காசுகளாகவும், டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.82.06 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.73.78 காசுகளாகவும், மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.89.44 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.33 காசுகளாகவும் விற்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கர்நாடாகவில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.2 குறைக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் HD குமாரசாமி அறிவித்துள்ளார். இந்த வரி குறைப்பின் மூலம் பெட்ரோல், டீசல் விலை கர்நாடகாவில் 2 ரூபாய் வரை குறையும் என தெரிகிறது. ஏற்கனவே, ஆந்திர மாநில அரசு, 2 ரூபாய் வரி குறைப்பு செய்தது. ராஜஸ்தானில், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி 4 சதவீதம் குறைக்கப்பட்டது குறிப்பிடதக்கது...!
Today, we are taking a decision that we are going to reduce Rs 2 on both petrol and diesel: Karnataka Chief Minister HD Kumaraswamy in Kalaburagi #Karnataka pic.twitter.com/COyYWzFAmy
— ANI (@ANI) September 17, 2018