மக்களின் பாதுகாப்பு, நாட்டின் வளர்ச்சியே இந்தியாவின் முன்னுரிமை!!

ஆப்கானிஸ்தான் பயங்கரவாதத்தின் தாக்கத்திற்கு உதாரணமாக விளங்குகிறது பிரதமர் மோடி!! 

Last Updated : Jun 10, 2018, 10:40 AM IST
மக்களின் பாதுகாப்பு, நாட்டின் வளர்ச்சியே இந்தியாவின் முன்னுரிமை!! title=

ஆப்கானிஸ்தான் பயங்கரவாதத்தின் தாக்கத்திற்கு உதாரணமாக விளங்குகிறது பிரதமர் மோடி!! 

சீனா குவின்காடோ நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் மோடி சீன சென்றுள்ளார். பிரதமர் மோடி அதிபர் ஜி ஜின்பிங், தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மோன் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாட்டு அதிபர் ஷவ்கத் மிர்ஸியோயேவ் ஆகியோரை சந்தித்து நாடுகளுக்கிடையேயான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். 

இந்நிலையில், இன்று மாநாட்டின் இரண்டாவது அமர்வு தொடங்கியது. இதில், உறுப்பினராக உள்ள அனைத்து நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து, இன்றைய கூட்டத்தில் பிரதமர் மோடி அனைவரின் முன்னிலையிலும் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது....!  

பயங்கரவாதத்தின் விளைவு என்ன? என்பதற்கு ஆப்கானிஸ்தான் துரதிர்ஷ்டவசமான உதாரணம். அங்கு அமைதியை நிலைநாட்ட அந்நாட்டு அதிபர் அஷ்ரப் ஞானி எடுத்து வரும் துணிச்சலான முடிவுக்கு பிராந்திய நாடுகள் மதிப்பளிக்க வேண்டும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகளில் இருந்து வெறும் 6% பேர் மட்டுமே இந்தியாவுக்கு சுற்றுலா வருகின்றனர். இதனை எளிதாக இரட்டிப்பாக மாற்ற இயலும்.ஷாங்காய் அமைப்பின் உணவு மற்றும் புத்த கலாச்சார மாநாட்டை நடத்த இந்தியா தயாராக உள்ளது. புவியியலின் வரையறையை மாற்றி அமைக்கும் அளவிலான டிஜிட்டல் இணைப்பை ஏற்படுத்தி உள்ளோம். அண்டை நாடுகள் மற்றும் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதே எங்களின் முன்னுரிமை. 

குடிமக்களின் பாதுகாப்பு, அனைவருக்கும் பொருளாதார வளர்ச்சி, அனைத்து பகுதிகளையும் ஒன்றிணைப்பது, மக்களின் ஒற்றுமை, இறையாண்மைக்கு மதிப்பளிப்பது, ஒருமைப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியனவே இந்தியாவின் முன்னுரிமை என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.பிராந்திய நாடுகளை ஒன்றாக இணைப்பது இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாக இருக்கும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது! 

 

Trending News