உத்தரகாண்ட் மாநில முதல்வராக தேர்வு செய்யப்பட்ட திரிவேந்திரசிங் ராவத் இன்று பதவி ஏற்றார். பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உத்தரகாண்ட் முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் பதவியேற்றார். ராவத்துக்கு உத்தராகண்ட் ஆளுநர் கிரிஷன காந்த பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
நடைபெற்று முடிந்த உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி, பாரதீய ஜனதா கட்சி அபார வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 70 இடங்களில் அந்தக்கட்சி 57 இடங்களை வென்று, ஆட்சியை கைப்பற்றியது. அங்கு முதல்–மந்திரி பதவிக்கு 3 முன்னாள் முதல்–மந்திரிகள் உள்பட 6 பேர் கடும் போட்டியில் இறங்கினர். அவர்களில் முன்னாள் மத்திய மந்திரி சத்பால் மகாராஜ், பிரகாஷ் பந்த் உள்ளிட்டவர்கள் அடங்குவர்.
இந்நிலையில் சட்டசபை கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், டேராடூனில் உள்ள ஓட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வராக திரிவேந்திரசிங் ராவத் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநில முதல்வராக தேர்வு செய்யப்பட்ட திரிவேந்திரசிங் ராவத் இன்று பதவி ஏற்றார் .