பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்காமல் செல்ல மாட்டேன்: பிரியங்கா காந்தி உறுதி

விருந்தினர் மாளிகையில் அமர்ந்திருக்கும் பிரியங்கா காந்தியும், "நான் சோன்பத்ராவுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பேன்" எனக் கூறியுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 19, 2019, 05:56 PM IST
பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்காமல் செல்ல மாட்டேன்: பிரியங்கா காந்தி உறுதி title=

மிர்சாபூர்: விருந்தினர் மாளிகையில் இருக்கும் பிரியங்கா காந்தி "நான் சோன்பத்ராவுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பேன்" எனக்கூறி தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.

சோன்பத்ராவில் நிலத்தகராறில் கடந்த 17 ஆம் தேதி நடந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியாகினர். மேலும் 24 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் காயம் அடைந்து வாரணாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் காயம் அடைந்து வாரணாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து உ.பி. காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி ஆறுதல் தெரிவித்தார். 

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்திக்க துப்பாக்கிச் சூடு நடைபெற்ற கிராமத்தை நோக்கி சென்ற பிரியங்கா காந்தியை, 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாகக் கூறி மிர்சாபூர் மற்றும் வாரணாசியின் எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் கோபமடைந்த பிரியங்கா காந்தி, நாராயன்பூரில்  ஆதரவாளர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த பகுதியில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

அங்கு பரபரபப்பு ஏற்ப்பட்டதால், பிரியங்கா காந்தியை மிர்சாபூர் விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். என்னை இங்கு தங்க வைத்திருப்பதை பார்த்தால், நான் கைது செய்யப்பட்டுள்ளதாத் தெரிகிறது எனக் கூறிய பிரியங்கா காந்தி, சோன்பத்ராவுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களையும், உயிர் இழந்தவரிகளின் குடும்பங்களை சந்திப்பேன். அதுவரை நான் இங்கிருந்து திரும்பி போக மாட்டேன் எனத் தெரிவித்த அவர், விருந்தினர் மாளிகையில் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.

Trending News