மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் ஆக.,9 நடைபெறும்!

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெறும்: அவைத் தலைவர் வெங்கையா நாயுடு!

Last Updated : Aug 6, 2018, 01:49 PM IST
மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் ஆக.,9 நடைபெறும்!  title=

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெறும்: அவைத் தலைவர் வெங்கையா நாயுடு!

நாடாளுமன்ற மாநிலங்களவை துணைத்தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.ஜே.குரியன் ஜோசப்பின் பதவிக்காலம் கடந்த ஜூலை 1 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இவர் கடந்த 1980ம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை 6 முறை மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.  அதன்பின்னர் கடந்த 2005 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற மேலவைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையநாயுடு, குரியனின் பிரிவு உபசார விழாவில் பங்கேற்ற போது, ‘துணை தலைவர் பதவிக்கு, ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஏகமனதாக ஒருவரை தேர்வு செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார். ஆனால், ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இன்று வரை ஒருமித்த கருத்து ஏற்படாததால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் முடிவு செய்வாரா என அனைத்து கட்சிகளுமே எதிர்பார்த்திருந்த நிலையில், குடியரசுத் துணைத்தலைவரும் மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு இன்று அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

அதன்படி, மாநிலங்களவை  துணைத்தலைவர் தேர்தல் வருகிற ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது எனவும் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

 

Trending News