உலக அளவில் கொரோனா பாதிப்பு நிலவரம் புதுப்பிப்பு

சர்வதேச அளவிலான கொரோனா பாதிப்பு தொடர்பான அண்மைத் தகவல்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 3, 2020, 11:42 PM IST
  • உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை10,704,228
  • ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டியது
  • COVID-19 நோய்த்தொற்றால் அதிக உயிரிழப்புகளைச் சந்தித்த நாடுகளின் பட்டியலில் ஆறாம் இடத்தில் மெக்சிகோ
உலக அளவில் கொரோனா பாதிப்பு நிலவரம் புதுப்பிப்பு title=

புதுடெல்லி: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை10,704,228. இதுவரை கொரோனாவால் உலக அளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,16,434ஆக உயர்ந்துவிட்டது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 54,89,399

இந்தியாவில் ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டிவிட்டது

ஆஸ்திரேலியா: 300,000 மக்கள் தொகை கொண்ட மெல்போர்ன் புறநகர்ப்பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று தீவிரமாக பரவுவதால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த உத்தரவிடப்பட்டது.

Read Also | பயத்தில் உயர்மட்ட கூட்டத்தை கூட்டிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

பிரேசில் நாட்டின் மத்தியமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் COVID-19 நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டியது

COVID-19 நோய்த்தொற்றைக் குணப்படுத்த உதவும் ரெம்டிசிவிர் மருந்தை பெருமளவில் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

COVID-19 நோய்த்தொற்றால் அதிக உயிரிழப்புகளைச் சந்தித்த நாடுகளின் பட்டியலில் ஸ்பெயினை முந்தி ஆறாம் இடத்துக்குச் சென்றது மெக்சிகோ

Trending News