கடந்த 7-ம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் தொடரின் 11_வது சீசனின் நேற்று மும்பையில் நடைபெற்ற 9-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின.
இந்நிலையில், முதலில் களமிறங்கிய டெல்லி அணி கேப்டன் கம்பீர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மாவுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ், இவின் லீவிஸ்சுடன் இணைந்து களம் இறங்கினார்.
இருவரும் அடித்து ஆடி அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். இருவரும் பவுண்டரி, சிக்சர்கள் என விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர்.
195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாசன் ராய் நிலைத்து நின்று அபாரமாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.
இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
3-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணி தொடர்ச்சியாக சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும். ஏற்கனவே சென்னை, ஐதராபாத் அணிகளிடம் இதேபோல் கடைசி ஓவரில் தோல்வி கண்டு இருந்தது. 3-வது ஆட்டத்தில் விளையாடிய டெல்லி அணிக்கு இது முதல் வெற்றியாகும்.