Diabetes prevention Lifestyle News Tamil : உலகளவில் நீரிழிவு நோய் அதிகமாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. இளம் வயதினர் கூட சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணிகள் என்றால் மோசமான உணவு மற்றும் வாழ்க்கை முறைகள் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒருவேளை சர்க்கரை நோயால் பாதிக்கப்படாமல் இருக்கும் இளம் வயதினர் முன்கூட்டியே உணவு பழக்க வழக்கங்களில் கவனமாக இருந்தால் நீரிழிவு நோய் பிரச்சனையில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். அந்தவகையில் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் சீராக வைத்திருக்கும் ஜூஸ்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
ரத்த சர்க்கரை அளவை சீராக்கும் மூலிகை டீ வகைகள்
1. வெந்தய டீ
எல்லோர் வீட்டிலும் சமையலறையில் இருக்கும் வெந்தயத்தை கொண்டு டீ தயாரிக்கலாம். ரத்த சர்க்கரை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட இதில் பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. நீரிழிவு நோய் குறித்த மருத்துவ ஆய்வு குறித்து வெளியான ஆய்வில் வெந்தய விதைகளில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளதாகவும், இது கார்போஹைட்ரேட் செரிமானம் மற்றும் உறிஞ்சுதலை மெதுவாக்குவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தினசரி குடிப்பதன் மூலம் ரத்தத்தில் குளுக்கோஸ் கட்டுபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் HbA1c நிர்வகிக்கிறது என தெரியவந்துள்ளது. வெந்தய விதைகளை வெந்நீரில் கொதிக்க வைத்து, பொதினா இலைகளை சேர்த்து தயாரிக்கலாம்.
மேலும் படிக்க | உங்கள் வாழ்க்கையை ஜம்முனு மாத்தும் துளசி, தேன், மிளகு கூட்டணி..! பாட்டி மருத்துவம்
2. இலவங்கப்பட்டை தேநீர்
காரமான குழம்புகளில் தவறாமல் இடம்பெறும் லவங்கப்பட்டையில் மருத்துவ குணங்கள் உள்ளன. மருத்துவ உணவு இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி, இலவங்கப்பட்டை இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதோடு இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. இலவங்கப்பட்டை டீயை தண்ணீருடன் இலவங்கப்பட்டையை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்து தயாரிக்கலாம்.
3. இஞ்சி டீ
எல்லோரும் இஞ்சி டீ குறித்து அறிந்திருப்பீர்கள். இஞ்சியில் இயற்கையாகவே அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கொண்ட மூலிகை தான் இது. ஜர்னல் ஆஃப் காம்ப்ளிமெண்டரி அண்ட் இன்டகிரேடிவ் மெடிசின் ஆய்வில், இஞ்சியானது HbA1c ஐ மேம்படுத்தி, டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கான ரத்த சர்க்கரையை நிர்வகிக்க ஒத்துழைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இஞ்சி துண்டை சுமார் 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து டீயாக சாப்பிடலாம்
4. கிரீன் டீ
இஞ்சி டீயைப் போல் இருக்கும் பிரபலமான மூலிகை டீ கிரீன் டீ ஆகும். ரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் கிரீன் டீயில், அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியின் படி, பாலிபினால்கள் உள்ளதாகவும், குறிப்பாக எபிகல்லோகேடசின் கேலேட் (EGCG) இருபதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் உதவும்.
5. செம்பருத்தி தேநீர்
பிரபலம் இல்லாத ஒரு டீ என்றால் அது செம்பருத்தி டீ தான். இதில் ஆக்ஸிஜனேற்றத்தில் நிறைந்திருப்பதால், ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் திறன் உள்ளது. Nutritional Biochemistry இதழில் வெளியான ஆய்வில் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும் ஆற்றல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலர்ந்த செம்பருத்தி பூக்களை வெந்நீரில் சுமார் 5-10 நிமிடங்கள் கொதிக்க வைத்து அந்த நீரை குடிக்கவும்.
மேலும் படிக்க | குழந்தைகளிடம் இந்த விசயங்களை பற்றி பெற்றோர்கள் ஒருபோதும் பேச கூடாது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ