இந்தியாவில் 19,500 தாய் மொழியாக பேசப்படுகிறது -ஆய்வில் தகவல்!

இந்தியாவில் மொத்தம் 19,500 மொழிகள் தாய் மொழிகளாக பேசப்படுவதாக ஆய்வில் தகவல்!!

Last Updated : Jul 1, 2018, 07:18 PM IST
இந்தியாவில் 19,500 தாய் மொழியாக பேசப்படுகிறது -ஆய்வில் தகவல்! title=

இந்தியாவில் மொத்தம் 19,500 மொழிகள் தாய் மொழிகளாக பேசப்படுவதாக ஆய்வில் தகவல்!!

இந்தியாவில், இன, மத, மொழி அடிப்படையில் பல்வேறு மக்கள் வசித்து வருகின்றனர்.  இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, ஒவ்வொரு தனி நபரின் தாய் மொழி குறித்த விவரங்களும் சேகரிக்கப்படுகிறது.

கடந்த 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் மொத்தம் 19 ஆயிரத்து 569 மொழிகள் தாய் மொழிகளாக பேசப்படுகிறது. ஆனால் இந்தியாவில் 22 மொழிகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய மக்கள் தொகையில், 96.71 சதவிகிதம் மக்கள் இந்த 22 மொழிகளையே பயன்படுத்துவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 121 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் 10,000 குறைவான மக்கள் உபயோகிக்கும் மொழிகளின் எண்ணிக்கை 121 ஆக உள்ளது. அதிகாரப்பூர்வ பட்டியலில் இல்லாத மொழிகள் கடந்த 2001-ம் ஆண்டு 100 ஆக இருந்த நிலையில், 2011-ல் அது 99 ஆக குறைந்துள்ளது.

Trending News