SBI Annuity Deposit Scheme: மாதாந்திர வருமானத்துடன் பல வசதிகளை வழங்கும் அசத்தல் திட்டம்

இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு மொத்த தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, வங்கியில் இருந்து ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் அல்லது EMI வடிவில் ஒரு நிலையான தொகையைப் பெறுவீர்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 26, 2020, 04:34 PM IST
  • இந்த திட்டத்தின் கீழ் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கால வைப்பு விகிதத்தில் மட்டுமே வட்டி செலுத்துகிறது.
  • இந்த திட்டத்தில் முதலீடு செய்ய குறைந்தபட்சம் ரூ .25 ஆயிரம் தேவை.
  • SBI Annuity Deposit Scheme-ல் முதலீடு செய்வதற்கு அதிகபட்ச வரம்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை.
SBI Annuity Deposit Scheme: மாதாந்திர வருமானத்துடன் பல வசதிகளை வழங்கும் அசத்தல் திட்டம் title=

கொரோனா வைரஸ் நெருக்கடிக்குப் பிறகு, உலகம் முழுவதிலும், குறிப்பாக இந்தியாவில் அனைவரும் குறைந்தபட்சம் 6 மாதங்களுக்காவது அவசர தேவைக்கான நிதியை தயார் செய்து வைத்திருக்க வேண்டும் என்பது தெளிவாகியுள்ளது. இதேபோல், ஓய்வுக்குப் பிறகும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான வருமானம் தேவைப்படுகிறது. இந்த விஷயத்தில், SBI Annuity Deposit Scheme பற்றிய குறிப்பு மிகவும் பொருத்தமானதாகிறது. எந்தவொரு பணியிலிருந்தும் ஓய்வு பெறுபவர்களிடையே இது மிகவும் பிரபலமான திட்டமாகும்.

இந்த திட்டம் தொடர்பான சிறப்பு விஷயங்களை அறிந்து கொள்வோம்.

இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு மொத்த தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, வங்கியில் இருந்து ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் அல்லது EMI வடிவில் ஒரு நிலையான தொகையைப் பெறுவீர்கள். வங்கியில் இருந்து ஒவ்வொரு மாதமும் பெறப்படும் நிலையான தொகை வட்டியின் ஒரு பகுதியையும் அசல் தொகையையும் கொண்டிருக்கும். இந்த திட்டத்தின் கீழ், வட்டி காலாண்டு அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

மாத ஓய்வூதியம் எப்போது வரும்

இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வது பற்றி நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் பணத்தை எந்த தேதியில் டெபாசிட் செய்கிறீர்களோ, அடுத்த மாதத்திலிருந்து அதே தேதியில் மாத ஓய்வூதியம் (Pension) கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். இருப்பினும், அக்டோபர் 31 ஆம் தேதி நீங்கள் பணத்தை டெபாசிட் செய்திருந்தால், நவம்பர் 30 நாட்கள் இருப்பதால், அடுத்த பணி நாளான, டிசம்பர் 1 ஆம் தேதி ஓய்வூதியத் தொகையைப் பெறுவீர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ALSO READ: லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி...

இந்த திட்டம் தொடர்பான சிறப்பு விஷயங்கள்

இந்த திட்டத்தின் கீழ் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) கால வைப்பு விகிதத்தில் மட்டுமே வட்டி செலுத்துகிறது. SBI Annuity Deposit Scheme-ல் 36/60/84 அல்லது 120 மாதங்கள், அதாவது மூன்று ஆண்டுகள், ஐந்து ஆண்டுகள், ஏழு ஆண்டுகள் அல்லது பத்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் முதலீடு செய்ய குறைந்தபட்சம் ரூ .25 ஆயிரம் தேவை. SBI Annuity Deposit Scheme-ல் முதலீடு செய்வதற்கு அதிகபட்ச வரம்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை.

முதலீட்டாளர் இறந்து விட்டால், இந்த திட்டத்தை காலக்கெடுவுக்கு முன்பே மூடவும் ஒரு ஏற்பாடு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், எஸ்பிஐ ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் (Pensioners) மற்றவர்களை விட ஒரு சதவீதம் அதிகமாக வட்டி பெறுகிறார்கள். அதே நேரத்தில், மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீதம் அதிக வட்டி கிடைக்கிறது. இந்த திட்டத்தில் நியமன வசதி உள்ளது. இது தவிர, முதலீட்டாளர் வருடாந்திரத்தில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் 75% க்கு சமமான ஓவர் டிராஃப்ட் மற்றும் கடன் வசதியைப் பெறலாம்.

ALSO READ: Yes Bank வாடிக்கையாளரா நீங்கள்? Reward Points பற்றிய ஒரு good news உங்களுக்கு…..

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News