சனியின் தோஷத்தில் இருந்து விடுபட எளிய 7 பரிகாரங்கள்

ஒன்பது கிரகங்களில் மிகவும் ஆபத்தான கோபம் கொண்டவர் சனி தேவன் என்று நம்பப்படுகிறது. இதனால் சனி கிரகத்தை வலுப்படுத்தும் பரிகாரங்கள் மூலம் அவரை அமைதிபடுத்தினால், அதன் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 10, 2022, 08:38 PM IST
சனியின் தோஷத்தில் இருந்து விடுபட எளிய 7  பரிகாரங்கள் title=

ஜோதிட சாஸ்திரத்தில், சனி கிரகம் வலிமையாக இருப்பவர் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் எனவும் சனி பகவான்  அருள் இருந்தால், வாழ்க்கையில் மிகவும் வெற்றி அடையலாம் என்றும் கூறப்படுகிறது. அதே போன்று, சனியிடம் கோபத்திற்கு ஆளாகுபவர்கள் வாழ்க்கை  மிகவும் மோசமாகிவிடும் என்றும் கூறப்படுகிறது. சனி தோஷமாக இருந்தால், பெரும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

சனி தேவரின் கோபத்தை தணிப்பது அவசியம்

சனி கிரகம் நீதியின் சின்னமாக கருதப்படுகிறது. சனி வலுவாக இருந்தால் உங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மேலும், 9 கிரகங்களில் மிகவும் ஆபத்தான வகையில் கோபம் கொள்பவர் சனி தேவன் என்று கருதப்படுகிறது. அவரை சாந்தப்படுத்த பல வித பரிகாரங்கள் உள்ளன.  சனி கிரகத்தை பலப்படுத்தும் சில எளிய பரிகாரங்களை அறிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க | மே 2022 மாத ராசி பலன்: மேஷம் முதல் கடகம் வரை

சனி கிரகத்தை வலுப்படுத்த 7  பரிகாரங்கள்

1. சனி தேவரைப் பிரியப்படுத்த, குறைந்தது 19 சனிக்கிழமைகளாவது விரதம் இருக்க வேண்டும். மேலும், அதிகபட்சமாக 51 சனிக்கிழமைகள் வரை விரதம் இருக்கலாம். இது ஜாதகத்தில் சனி கிரகத்தை பலப்படுத்துகிறது.

2. சனி தேவரின் ஆசிகளைப் பெற உங்கள் பெற்றோருக்கு சேவை செய்யுங்கள். நீங்கள் உங்கள் பெற்றோரிடமிருந்து விலகி வாழ்ந்தால், அவர்களுக்கு தினமும் தொலைபேசி மூலமாக பேசுங்கள். அவர்களுக்கு மனதார வணக்கம் செலுத்துங்கள்.

3. சனியின் ஏழரை நாட்டு சனியின் காரணமாக, சகல விதமான தொல்லைகளும் உங்களை சூழ்ந்திருந்தால், சனிக்கிழமையன்று கருப்பு வஸ்திரம் அணிந்து, சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றவும். அதோடு, : சனிச்சராய நம:  என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

4. சிவபெருமானைப் போலவே, சனி தோஷம் தொடர்பான பிரச்சனைகளும்க்கு ஹனுமனை வழிபட்டாலும் சிறந்த பலன் கிடைக்கும். ஜாதகத்தில் சனி தொடர்பான தோஷங்கள் நீங்க, சுந்தரகாண்டம் பாராயணம் செய்து, அனுமன் கோவிலுக்குச் சென்று உங்கள் சக்திக்கு ஏற்ப இனிப்பு பிரசாதம் வழங்குங்கள்.

5. சிவன் வழிபாடு சனியுடன் தொடர்புடைய தோஷங்களை நீக்க அல்லது அவரைப் பிரியப்படுத்த செய்யப்படும் பரிகாரமாகும். இதனால் நிச்சயம் பலன் கிடைக்கும் என கூறப்படுகிறது

6. சனி தேவரின் கோபத்தை தணிக்க, இந்த மந்திரத்தை ஜபிக்கவும்.

सूर्य पुत्रो दीर्घ देहो विशालाक्ष: शिव प्रिय:।
मंदाचाराह प्रसन्नात्मा पीड़ां दहतु में शनि:।।

(ஸூர்ய புத்திரோ தீர்க்க தேஹோ விஶாலாக்ஷ: ஶிவ ப்ரிய:
மந்தச்சரஹ ப்ரசன்னாத்ம பீடம் தஹதுவில் சனி: )

7. சனிக்கிழமையன்று, கருப்பு நிற திரி கொண்டு நல்லெண்ணெய்  தீபம் ஏற்றவும். மஹாராஜா தசரதர் எழுதிய சனி ஸ்தோத்திரத்தையும் சனிக்கிழமை படிப்பது நல்ல பலனைத் தரும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Solar Eclipse: கிரகணத்தின் போது சூரியனின் அருளைப் பெற செய்ய வேண்டியவை 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News