Bank Holidays June 2022: ஜூன் மாதத்தில் 12 நாட்கள் வங்கி விடுமுறை

Bank Holidays in June 2022: இன்று முதல் ஜூன் மாதம் தொடங்கிவிட்டது, ஜூன் மாதத்தில் வங்கிக் கிளைக்குச் சென்று வங்கிப் பணிகளை செய்ய போகிறீர்கள் என்றால், கண்டிப்பாக முதலில் இந்தச் செய்தியைப் படியுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 1, 2022, 02:06 PM IST
  • விடுமுறை நாட்களின் பட்டியல்
  • ஜூன் மாதத்திற்கான விடுமுறைப் பட்டியல்
  • ஆன்லைன் பேங்கிங் சேவைகள் எப்போதும் போல செயல்படும்
Bank Holidays June 2022: ஜூன் மாதத்தில் 12 நாட்கள் வங்கி விடுமுறை title=

இன்று முதல் ஜூன் மாதம் தொடங்கிவிட்டது, ஜூன் மாதத்தில் வங்கி தொடர்பான எந்த ஒரு வேலையும் செய்ய நினைத்தால் கண்டிப்பாக இந்த செய்தியை முதலில் படியுங்கள். ஆம்., இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஜூன் 2022க்கான விடுமுறைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின்படி, ஜூன் மாதத்தில் மொத்தம் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வருகிறது. அதேபோல் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

ரிசர்வ் வங்கி விடுமுறை நாட்களை மூன்று வகைகளாகப் பிரித்துள்ளது
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வங்கி விடுமுறை பட்டியலை மூன்று வகைகளாகப் பிரித்துள்ளது. (ஜூன் 2022 இல் வங்கி விடுமுறைகள்) இதில் நெகோஷியபிள் இன்ஸ்ட்ரூமென்ட் சட்டம், ரியல் டைம் கிராஸ் செட்டில்மென்ட் ஹாலிடே மற்றும் வங்கிகளின் கணக்குகளை மூடுவது ஆகியவை அடங்கும். தேசிய விடுமுறைகள் தவிர, சில மாநில-குறிப்பிட்ட விடுமுறைகள் உள்ளன, அதேபோல் இதில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளும் அடங்கும். எனவே ஜூன் மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க | Masked Aadhaar: ஆதாரின் நகலை பகிரவேண்டாம்: ஆதார் எண்ணை பகிர டிப்ஸ் தரும் UIDAI 

விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ

ஜூன் 2 (வியாழன்): மகாராணா பிரதாப் ஜெயந்தி/தெலுங்கானா ஸ்தாபக தினம் - ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் விடுமுறை
ஜூன் 3 (வெள்ளிக்கிழமை): ஸ்ரீ குரு அர்ஜுன் தேவ் ஜியின் தியாக தினம் - பஞ்சாப் மாநிலத்தில் விடுமுறை
ஜூன் 5 (ஞாயிறு): வாராந்திர விடுமுறை
ஜூன் 11 (சனிக்கிழமை): இரண்டாவது சனிக்கிழமை வங்கி விடுமுறை
ஜூன் 12 (ஞாயிறு): வாராந்திர விடுமுறை
ஜூன் 14 (செவ்வாய்): துறவி குரு கபீர் ஜெயந்தி - ஒரிசா, சண்டிகர், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் விடுமுறை
ஜூன் 15 (புதன்கிழமை): ராஜ சங்கராந்தி/ஒய்எம்ஏ தினம்/குரு ஹர்கோவிந்த் பிறந்த நாள் - ஒரிசா, மிசோரம், ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய இடங்களில் விடுமுறை
ஜூன் 19 (ஞாயிறு): வாராந்திர விடுமுறை
ஜூன் 22 (புதன்கிழமை): கர்ச்சி பூஜை - திரிபுராவில் விடுமுறை
ஜூன் 25 (சனிக்கிழமை): நான்காவது சனிக்கிழமை வங்கி விடுமுறை
ஜூன் 26  (ஞாயிறு): வாராந்திர விடுமுறை
ஜூன் 30 (புதன்கிழமை): ராம்னா நீ - மிசோரம் மாநிலத்தில் விடுமுறை

தமிழகத்தில் வார விடுமுறை தவிர மற்ற பொது விடுமுறை நாட்கள் விடுமுறை இல்லை. ஆக இந்த விடுமுறை நாட்களால் தமிழகத்திற்கு பெரும் பாதிப்பு என்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 7th Pay Commission:ஊழியர்களுக்கு டிஏ அரியர் தொகை கிடைக்குமா, கிடைக்காதா 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News