கடந்த ஆண்டு முதல் உலகையே புரட்டி போட்டிருக்கும் கொரோனா வைரஸ் நேரடியாக பல பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், பக்கவிளைவாக எண்ணில் அடங்கா அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
உயிர்கொல்லி வைரஸான கொரோனா பரவாமல் தடுக்க சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது என அரசு பல தடைகளை விதித்துள்ளது. பாதிப்பிலிருந்து பாதுகாப்பதற்கான வழிமுறைகள் இவை.
மருத்துவர்களின் அறிவுரையின்படி காதல் ஜோடிகள், திருமணமானவர்கள் என அனைவரும் தங்கள் இயல்பான நெருக்கத்தை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்வது நல்லது என்று அறிவுறுத்துகின்றனர். ஏனென்றால் கொரோனா எச்சில், காற்று என எந்த விதத்தில் வேண்டுமானாலும் பரவலாம். அதனால் தான் சமூக இடைவெளி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனாவின் வீரியம் தெரியாத ஜோடிகள் லாக்டவுன் விதிக்கப்பட்டதிலிருந்து மாலை நேரங்களில் நெருக்கமாக இருப்பதை பார்த்த மும்பை நகரவாசிகள் ஒரு கட்டுப்பாடை விதித்துள்ளனர்.
மும்பையின் போரிவலி பெயிண்ட்ஸில் உள்ள குடியிருப்புப் பகுதியில் ஜோடிகள் நெருக்கமாக இருப்பதற்கும், முத்தம் இட்டுக் கொள்வதற்கும் கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்தியா போன்ற பழமைவாத நாட்டில் பொதுவெளியில் காதல் செய்யும் காட்சிகள் சற்று சங்கோஜத்தை ஏற்படுத்தும். அதை எதிரொலிக்கிறது மும்பையின் போரிவலியில் இருக்கும் ஒரு குடியிருப்பு வளாகம்.
தார்மீக விழிப்புணர்வு என்பதன் அடிப்படையில், சத்யம் சிவம் சுந்தரம் என்ற குடியிருப்பு வளாகத்தை சேர்ந்தவர்கள், வெட்டவெளியில் ஜோடிகள் காதல் செய்வதை பார்த்து கடுப்பாகிவிட்டார்கள். காதலையும், அன்பையும் உங்கள் வீட்டுக்குள்ளே வைத்துக் கொள்ளுங்கள் என்று வெகுண்டெழுந்த இந்த மும்பைவாசிகள், தம்பதியினர் நெருக்கமாக இருப்பதைத் தடுக்க தங்கள் காலனிக்கு வெளியே "இது முத்தமிடுவதற்கான இடம் இல்லை" என்று எழுதி வைத்துவிட்டன.
After No Honking Zone..No Traffic Zone...No Hawker Zone..
Now NO KISSING ZONE in #Mumbai.@mumbaimatterz @RoadsOfMumbai pic.twitter.com/OqPRj8SIIn
— Vivek Gupta News 18 (@imvivekgupta) August 1, 2021
இந்த குடியிருப்பு வளாகத்தில் வசிப்பவர்கள் கொரோனா வைரஸ் லாக்டவுன் காலகட்டத்தில் தினசரி மாலை ஜோடிகள் நெருக்கமாக அந்தரங்கமாக இருப்பதை பார்த்தார்கள். இதை தடுக்க எண்ணி போலீசாரையும் அணுகிவிட்டனர். வெட்டவெளியில் நெருக்கமாக இருக்கும் வீடியோவை எடுத்து, அதை ஆதாரமாக காவல்துறையிடம் கொடுத்தார்கள். ஆனால் போலீசார் இதைப் பற்றி அதிகம் கண்டுகொள்ளவில்லை. எனவே, குடியிருப்பு வளாக உறுப்பினர்கள் கலந்தாலோசித்து, இது தொடர்பான அறிவிப்பை வைக்க முடிவு செய்தனர்.
நாங்கள் காதலர்களுக்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் ‘அநாகரீகத்திற்கு’ எதிரானவர்கள் என்பதை வலியுறுத்துகிறார் குடியிருப்பு வாளக சங்கத் தலைவர் வினய் அஞ்சுர்கர். தம்பதிகள் மற்றும் முத்தங்களுக்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் எங்கள் வீடுகளுக்கு வெளியே உள்ள வளாகத்தை முத்த மண்டலமாக மாற்ற அனுமதிக்க முடியாது. முதலில் அங்கு வரும் ஜோடிகளுக்கு பொறுமையாக எடுத்துச் சொன்னோம். ஆனால் அது பயனளிக்கவில்லை. இப்போது இப்படி எழுதி வைத்துவிட்டதால், ஜோடிகள் இங்கே வருவதில்லை. சிலர் செல்ஃபி எடுக்க இங்கு வருகிறார்கள். அவர்கள் இந்த மார்க்கிங்கை பார்க்கும்போது ஏற்படும் உளவியல் தாக்கத்தால் முத்தமிட தயங்குகின்றனர் என்று அவர் கூறுகிறார்.
Also Read | Healthy Hair Tips: நரைமுடியை குறைத்து, தலைமுடி ஆரோக்கியத்திற்கு உதவும் உணவுகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR