சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா 600 கிளைகளை மூடத் திட்டமா

600க்கும் மேற்பட்ட கிளைகளை மூடிவது தொடர்பாக சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி சார்பிலும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 8, 2022, 02:30 PM IST
  • பல கிளைகள் மூடப்பட்டன
  • ரிசர்வ் வங்கி முக்கிய நடவடிக்கை
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா 600 கிளைகளை மூடத் திட்டமா title=

600க்கும் மேற்பட்ட கிளைகளை மூடிவது தொடர்பாக சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி சார்பிலும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வங்கி கிளைகளை மூடுவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. 

ஏப்ரல் 2017 முதல் டிசம்பர் 2021 வரை பல கிளைகள் மூடப்பட்டன
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி ஏப்ரல் 2017 முதல் டிசம்பர் 2021 வரை 186 கிளைகளை மூடியுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கி வாராக்கடன் காரணமாக நஷ்டம் அடைந்து வருவதாகவும் ரிசர்வ் வங்கி இந்த வங்கியை சீரமைக்கும் வகையில் 600 கிளைகளை மூட ஆலோசனை கூறியுள்ளதாகவும் தகவல் வெளியானது.

மேலும் படிக்க | ஆயுள் காப்பீடு எடுக்கும்போது கவனம் தேவை: இந்த தவறுகளால் சிக்கல் வரலாம்

ஆனால் இந்த தகவலுக்கு பதில் அளித்துள்ள வங்கி இதுவரை அப்படி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது. மேலும் கூறிய வங்கி, எங்கள் வாடிக்கையாளர்களையும் வணிகத்தையும் கருத்தில் கொண்டு, கிளைகளை இணைத்தல், இடமாற்றம் போன்ற மாற்றங்கள் அவ்வப்போது செய்யப்படுகின்றன. டிசம்பர் 2021 நிலவரப்படி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 4,528 கிளைகளைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்கி ஏன் நடவடிக்கை எடுத்தது?
2017 ஆம் ஆண்டில், இந்திய ரிசர்வ் வங்கியானது, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மற்றும் பிற 11 வங்கிகளை பிசிஏவின் கீழ் வைத்தது. அப்போது நிதி நிலை சீர்குலைவு காரணமாக ரிசர்வ் வங்கியால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மற்ற வங்கிகள் தங்கள் நிலையை மேம்படுத்தி, பட்டியலில் இருந்து தங்களை விலக்கிக் கொண்டாலும், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா தொடர்ந்து பட்டியலில் நீடிக்கிறது. இந்த ஒழுங்குமுறையின் கீழ், வங்கி நிறைய ஆய்வுகளை எதிர்கொள்ள வேண்டும். கிளைகளின் விரிவாக்கத்துடன், பல வகையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

மேலும் படிக்க | லாங் டிரைவ் போறிங்களா? டோல்கேட் இல்லாத வழிகளை கண்டுபிடிப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News