பிலவ, ஆடி 29ம் நாள் (2021 August, 14 ): இன்றைய உங்கள் ராசி பலன் கூறுவது என்ன

எப்படி இருக்கும் உங்கள் ராசிபலன்கள். உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன? அதிர்ஷ்ட எண் என்ன? எந்த காரியம் எப்பொழுது செய்வது என்பதைக் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 14, 2021, 06:30 AM IST
பிலவ, ஆடி 29ம் நாள் (2021 August, 14 ): இன்றைய உங்கள் ராசி பலன் கூறுவது என்ன title=

மேஷம்

குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். போட்டியில் ஈடுபட்டு பரிசுகளையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள். வழக்கு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும்..

ரிஷபம்

உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். கடன் சார்ந்த சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் சோர்வாக காணப்படுவீர்கள். நெருக்கமானவர்களின் மூலம் எதிர்பாராத சில உதவிகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உடல் தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்படும். ரகசியமான செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்க வேண்டும்.

மிதுனம்

எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். நுட்பமான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். ஆன்மிகம் தொடர்பான காரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான புரிதல் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதுவிதமான பயிற்சிகளில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோகத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.

கடகம்

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். உறவினர்களின் வருகையால் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். மனை தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கால்நடைகளின் மூலம் மேன்மை உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் அமையும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

சிம்மம்

மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த துறைகளில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைக்கேற்ப முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூரப் பயணங்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். தகவல் தொடர்புத்துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் அமையும். வியாபார அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகளும், முயற்சிகளும் அதிகரிக்கும்.

கன்னி

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். தனவரவுகள் திருப்திகரமாக அமையும். ஆராய்ச்சி தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பாக இருந்துவந்த மறைமுகமான பிரச்சனைகள் குறையும். வெளியூர் தொடர்பான வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் சந்திப்பின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும்.

துலாம்
 

மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உடனிருப்பவர்களை நம்பியிருக்காமல் தாமே செயல்களை முடிப்பது நல்லது. உத்தியோகம் தொடர்பான வெளியூர் வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

விருச்சிகம்

கேளிக்கை தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். நண்பர்களுடனான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளின் மூலம் புதுவிதமான மாற்றங்கள் உண்டாகும். நண்பர்கள் வட்டம் விரிவடையும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்க வேண்டும். தொழிலில் முதலீடுகள் மேம்படும்.

தனுசு

கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தவறிய சில பொருட்கள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். மூத்த உடன்பிறப்புகள் அனுகூலமாக செயல்படுவார்கள்.

மகரம்

மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். புதுவிதமான சிந்தனைகள் அதிகரிக்கும். இலக்கியம் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் தொடர்பான நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் ஏற்படும்.

கும்பம்

உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பாக இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்கான கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனநிறைவை ஏற்படுத்தும்.

மீனம்

உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எந்தவொரு செயலிலும் கோபமின்றி நிதானத்துடன் செயல்பட வேண்டும். வியாபார பணிகளில் வேலையாட்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும்.

 

Trending News