புதிய போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் அபராதத்திற்கு பயந்து மகனை தந்தை வீட்டில் அடைத்து வைத்துள்ளார்!!
மோட்டார் வாகன திருத்த சட்டத்தின் கீழ் புதிய அபராத விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், புதிய மோட்டார் வாகனங்கள் சட்டத்தில் 5 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டிருப்பதற்கு பலரும் தங்களின் அதிருப்தியை பதிவு செய்து வருகின்றனர். போலீசார் அபராதத் தொகையை வசூலிப்பதை பாதி குறைத்துக் கொண்டால்கூட அது வருமான வரி, GST வசூலையும் தாண்டியிருக்கும் என்று பலரும் டிவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், புதிய போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள கடுமையான அபராதம் காரணமாக மகனை மோட்டார் சைக்கிளில் செல்ல விடாமல் தந்தை வீட்டில் அடைத்து வைத்த வேடிக்கையான சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து, மகன் காவல்துறையினருக்கு தகவலி கூறிய பின்னர் அவர்கள் அவரை அறையிலிருந்து விடுவித்துள்ளார்.
இந்த சம்பவம் இட்மத்-உத்-துளக் பகுதி நிலையத்தின் கீழ் இந்த சம்பவம் நடந்துள்ளது. அவரது தந்தை ஜலாம் சிங் இது குறித்து கூறுகையில், தனது மகன் ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுவதாகவும், அபராதம் கணிசமாக அதிகரித்துள்ளது என்றும் கூறினார். தனது மகன் தனது பைக்கோடு வலுக்கட்டாயமாக வெளியே செல்கிறான் என்ற பயத்தால் அவனைப் பூட்டுவதற்கான நடவடிக்கை எடுத்தேன் என்றும் அவர் கூறினார்.