புத்தாண்டில் சுக்கிரனுடன் சேர்ந்து சனி பகவான் வழங்கும் நல்லாசிகளை பெறும் ராசிகள்

Sukra And Shani Gochar: சுப கிரகமான சுக்கிரனுடன் சேர்ந்து வாழ்வை வளப்படுத்த வருகிறது புத்தாண்டின் சனிப் பெயர்ச்சி... பலன் பெறும் ராசிகள் இவை

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 24, 2022, 09:49 AM IST
  • சனிப் பெயர்ச்சியால் சுக்கிர ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்
  • சுக்கிரனின் அருளை கூட்டிக் கொடுக்கும் சனீஸ்வரர்
  • புத்தாண்டில் ராசி மாறும் சனி பகவானின் ஆசி பெறும் ராசிகள்
புத்தாண்டில் சுக்கிரனுடன் சேர்ந்து சனி பகவான் வழங்கும் நல்லாசிகளை பெறும் ராசிகள் title=

சனிப் பெயர்ச்சி 2023: கிரகங்களின் ராசி மாற்றங்களால் அனைத்து ராசிகளிலும் தாக்கங்கள் ஏற்படும். செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவானின் பெயர்ச்சி, மனிதர்களுக்கு, பிற கிரகங்களின் பெயர்ச்சியை விட அதிக பயத்தைக் கொடுக்கிறது. சனி பகவானின் மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும். அதிலும் வாழ்வின் வளத்திற்கு காரணமான சுக்கிரனின் நிலையுடன் இணைத்து சனிப்பெயர்ச்சியின் தாக்கங்களைப் பார்க்கும்போது சில ராசிகளுக்கு புத்தாண்டு அருமையானதாக இருக்கும்.

2023 ஜனவரி 17ம் தேதி, ஜோதிடத்தில் மிகவும் சிறப்பான நாள். சனீஸ்வரர் 30 ஆண்டுகளுக்கு பிறகு கும்ப ராசிக்கு பிரவேசிக்க உள்ளார். சுக்கிரனும் சனியும் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைக் கொடுப்பார்கள் என்று தெரிந்துக் கொள்வோம்.   

ரிஷபம்: சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு ரிஷப ராசிக்காரர்களின்  அதிர்ஷ்டமும் முற்றிலும் மாறும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். வேலையிலும் லாபம் கிடைக்கும். ஏழாவது வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் திருமண வாய்ப்புகள் அதிகம்.

மிதுனம்: போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். மேலும், அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலைகள் கிடைக்கும்.

மேலும் படிக்க | சனியுடன் சந்திரன் இணைந்ததால் ஏற்பட்ட புனர்ப்பு தோஷம்

கடகம்:  கடக ராசிக்காரர்களின் நிதி நிலை பலப்படும். மேலும், இந்த நேரம் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சனியின் சஞ்சாரம் நன்றாக இருபதால், வணிகம் அல்லது அவர்கள் தேர்ந்தெடுத்த துறையில் வளர்ச்சி பெறுவார்கள். நண்பர்கள் யார் பகைவர்கள் யார் என்பதை அடையாளம் காண சனீஸ்வரர் உதவுவார்.  

துலாம்: சுக்கிரன் மற்றும் சனியின் சஞ்சாரத்தினால், துலாம் ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும், தொழிலில் வெற்றி கிடைக்கும், குடும்பத்தில் அமைதியும், நல்லிணக்கமும் நிறைந்த சூழல் நிலவும். சுக்கிரன் சஞ்சாரமும், சனிப் பெயர்ச்சியும் துலாம் ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக ஆதாயங்கள் ஏற்படும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | திருமணத் தடையா? ராகு தோஷமா? ஏழில் ராகுவா? ராகு தோஷ நிவர்த்தி பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News