ATM கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி?

ஐசிசிடபிள்யூ எனப்படும் நிதி வசதி மக்களை ஏடிஎம் கார்டுகள் இல்லாமல் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க அனுமதிக்கிறது.  

Written by - RK Spark | Last Updated : Nov 15, 2022, 09:42 AM IST
  • ஏடிஎம் இல்லாமல் யூபிஐ மூலம் பணம் எடுக்கலாம்.
  • குறிப்பிட்ட ஏடிஎம்-களில் இந்த வசதி உள்ளது.
  • அனைத்து ஏடிஎம்களிலும் கொண்டுவர ஆர்பிஐ வலியுறுத்தல்.
ATM கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி?  title=

பொதுவாக நமது அவசர தேவைக்கு பணம் எடுத்துக்கொள்வதற்காக தான் ஏடிஎம் மையங்கள் இருக்கிறது, வங்கிகளில் சில செயல்முறைகளுக்கு பிறகு காத்திருந்து பணத்தை பெற வேண்டியதில்லை, பணம் தேவைப்படும்போது எளிதாக ஏடிஎம் மையத்திற்கு சென்று ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுத்துக்கொள்ளலாம், அதுவே நம் கையில் ஏடிஎம் கார்டு இல்லாமல் இருக்கும்போது எப்படி பணம் எடுப்பது என்பது குறித்த சந்தேகம் பலருக்கும் இருக்கும், இப்போது அந்த சந்தேகத்திற்கு தீர்வு கிடைத்துவிட்டது.  உங்களிடம் ஏடிஎம் கார்டு இல்லாவிட்டாலும் நீங்கள் டிஜிட்டல் வாலட்டை பயன்படுத்தி பணம் எடுக்கலாம். ஏடிஎம்களில் இருந்து யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் அதாவது யுபிஐ மூலம் பணம் எடுக்க முடியும், இன்டர்ஆப்பரபுள் கார்ட்லெஸ் கேஷ் வித்டிராவல் (ஐசிசிடபிள்யூ) எனப்படும் நிதி வசதி, மக்களை ஏடிஎம் கார்டுகள் இல்லாமல் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க அனுமதிக்கிறது.

மேலும் படிக்க | 10 வருடம் வாடகை வீட்டில் இருந்தால், அந்த வீடு நமக்கு சொந்தமா? உண்மை என்ன?

ரிசர்வ் வங்கியானது மற்ற வங்கிகளை ஏடிஎம்களில் ஐசிசிடபிள்யூ வசதிகளை வழங்க பரிந்துரை செய்துள்ளது.  இந்த வசதியின் மூலம் குளோனிங், ஸ்கிம்மிங், டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு போன்றவற்றின் டேட்டாக்களை திருடுவது போன்ற மோசடிகளிலிருந்து தப்பிக்க முடியும்.  கார்டு இல்லாமல் பரிவர்த்தனை மேற்கொள்ளும் வசதி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி), ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் பிற முன்னணி வங்கிகளின் ஏடிஎம் மையத்தில் கிடைக்கிறது.  யூபிஐ மூலம் பணம் செலுத்துவதால் கட்டாயமாக உங்கள் ஸ்மார்ட்போனில் கூகுள் பே, போன் பே, பேடியம் போன்ற ஏதேனும் ஒரு யூபிஐ செயலியை வைத்திருக்க வேண்டும்.  இருப்பினும் இந்த முறையை பின்பற்றி ஒரே நேரத்தில் ரூ.5000 வரை மட்டுமே எடுக்க முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், அதேசமயம் கார்டுகள் இல்லா பரிவர்த்தனைக்கு வங்கிகள் கூடுதல் கட்டணம் எதையும் வசூலிக்கவில்லை.  இப்போது இதனை எப்படி செய்யலாம் என்பது பற்றி பின்வருமாறு காண்போம்.

1) ஏடிஎம் மையத்தில் 'Withdraw Cash' என்கிற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
 
2) அடுத்ததாக யூபிஐ ஆப்ஷனை கிளிக் செய்யவேண்டும்.

3) அடுத்து, உங்கள் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி ஏடிஎம் திரையில் காட்டப்படும் QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும்.

4) உங்களுக்கு எவ்வளவு தொகை வேண்டுமோ அதை டைப் செய்யவும்.

5) இப்போது யூபிஐ பின்னை உள்ளிட்டு 'Hit Proceed' என்கிற ஆப்ஷனை கிளிக் செய்யவேண்டும்.

மேலும் படிக்க | மாதந்தோறும் வருமானத்தை அள்ளித்தரும் அஞ்சல் அலுவலகத்தின் அசத்தலான திட்டம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News