Hanuman: மனைவி சமேத கல்யாண திருக்கோலத்தில் ஹனுமன் அருள் புரியும் ஆலயம் இது

அனுமன், தனது மனைவி சகேதமாக அருள் பாலிக்கும் ஊர் எது தெரியுமா?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 2, 2021, 08:35 AM IST
  • ராமபக்தர் அனுமான் பிரம்மச்சாரியல்ல
  • அனுமனின் மனைவி சுவர்ச்சலா தேவி.
  • அனுமன், தனது மனைவி சமேதமாக அருள் பாலிக்கும் ஊர் எது தெரியுமா?
Hanuman: மனைவி சமேத கல்யாண திருக்கோலத்தில் ஹனுமன் அருள் புரியும் ஆலயம் இது title=

திருமாலின் சிறிய திருவடி என்று போற்றப்படும் அனுமார் பிரம்மச்சாரியாகவே எல்லா இடங்களிலும் குடி கொண்டுள்ளார். ஆனால், அனுமனுக்கு திருமணம் ஆகிவிட்டது தெரியுமா? 

அனுமனின் மனைவி சுவர்ச்சலா தேவி. அனுமன், தனது மனைவி சமேதமாக அருள் பாலிக்கும் ஊர் எது தெரியுமா?

சூரியபுராணத்தின்படி, சூரியனிடம் இருந்து, கல்வி, இசை, கலை,வேதங்கள் என அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார் ராமரின் பக்தரான அனுமார். அனைத்தையும் கற்றுணர்ந்த அனுமன் “நவவியாகரண பண்டிதன்’ என்ற பட்டம் பெற விரும்பினார். 

நவ வியாகரணம் என்பது ஒன்பது வகையான வடமொழி இலக்கணங்கள் ஆகும். இந்த்ரம், ஸாந்த்ரம், காசகிருத்ஸ்னம், கெளமாரகம், சகதயனம், ஸாரஸ்வதம், ஆபிசலம், ஸாகலம், பாணிணீயம் ஆகியவை 9 வடமொழி இலக்கணங்கள் ஆகும். 

ALSO READ | கருடபுராணத்தின் இந்த 7 விஷயங்களை கடைபிடித்தால் நரகமே இல்லையாம்!
 
ஆனால், ஒரு குறிப்பிட்ட வியாகரணத்தைக் கற்க வேண்டுமானால், கற்பவருக்கு திருமணமாகி குடும்பஸ்தனாக இருக்க வேண்டும் என்பது நியதி. எனவே, இந்த கல்வியைக் கற்க வேண்டுமானால், அனுமனுக்கு திருமணம் நடைபெற வேண்டும்.

புத்திசாலி மாணவனுக்கு நவவியா கரணத்தை முழுவதும் கற்றுக் கொடுக்க விரும்பிய சூரிய தேவன், தனது மகள் சுவர்ச்சலா தேவியை மாணவனான அனுமனுக்குத் திருமணம் (Marriage of Hanuman) முடித்து வைத்தார். 

அனுமன் நவ வீயாகரண பண்டிதன் என்பதற்கு ஆதாரமாக இருப்பவை வால்மீகி ராமாயணமும், அனுமன் அஷ்டோத்தரமும் ஆகும்.  

கண்டிலன் உலகம் மூன்றும் காலினால் கடந்து கொண்ட

புண்டரீகக் கண் ஆழிப் புரவலன் பொலன் கொள் சோதிக்

குண்டல வதனம் என்றால் கூறலாம் தகைமைத்து ஒன்றோ

பண்டை நூல் கதிரோன் சொல்ல படித்தவன் படிவம் அம்மா 

என்று கம்ப ராமாயணத்தின் கிஷ்கிந்தா காண்டத்தில் அனுமன் படலத்தில் கம்பர் குறிப்பிட்டிருக்கிறார்.

ALSO READ | Numerology: 2022 ஆம் ஆண்டில் இந்த எண்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றி தான்..!!

பிரம்மச்சாரி என்று பெயர் பெற்ற அனுமனின் திருமணக்கோலத்தை, தைலாவரம் என்னும் திருத்தலத்திலுள்ள ஸ்ரீகல்யாண ஆஞ்சனேயர் கோவிலில் தரிசிக்கலாம். இந்த திருத்தலம், சென்னை- செங்கல்பட்டு சாலையில் அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தில் மூலவராக சுமார் 8 அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீஜெயவீர ஆஞ்சனேயர் அருள் பாலிக்கிறார். இதே கோவிலில் தனிச் சந்நிதியில் உற்சவராக இருக்கும் அனுமன், தனது மனைவி சுவர்ச்சலா தேவியுடன் வீற்றிருக்கிறார். 

ஸ்ரீகல்யாண ஆஞ்சனேயர், நான்கு கரங்களுடன் சங்கு,சக்கரம் ஏந்திய திருக்கோலத்தில் பீடம் கொண்டு, ‘சுவர்ச்சலா சமேத சதுர்புஜ சுபமங்களவரத ஆஞ்சனேயர்’ (Hanuman Temple) என்ற அழைக்கப்படுகிறார்.

உலகில் வேறு எங்குமே காணக் கிடைக்காத ஸ்ரீகல்யாண அஞ்சனேயரை கண்டு வாழ்வில் வளம் பெறுங்கள்.

ALSO READ | அடுத்த 13 நாட்களுக்கு அன்னை லட்சுமியின் கடைக்கண் பார்வை பெறும் 5 ராசிக்காரர்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News