நம் நாட்டை பொறுத்தவரை வெற்றிலை இல்லாமல் எந்தவொரு சுப நிகழ்ச்சியும் நடைபெறுவதில்லை. எல்லா நிகழ்ச்சிகளிலும் முதன்மையாக இடம் பிடிப்பது வெற்றிலைதான். சங்க கால நூல்களிலும் வெற்றிலையின் சிறப்புகள் பற்றி எழுதப்பட்டிருக்கின்றன. அக்கால மக்களின் ஆரோக்கிய உணவில் வெற்றிலையும் அடங்கும். இது ஒரு மருந்து பொருளும் கூட. ஜீரண உறுப்புகள் சரியாக வேலை செய்ய வெற்றிலை துணை புரிகிறது. இது தவிர பற்களுக்கு தேவையான கால்சியம், இரும்புச்சத்து ஆகியவையும் இதில் அடங்கி இருக்கிறது. வயிற்றில் உள்ள விஷக்கிருமிகளை கொல்லும் தன்மை வெற்றிலைக்கு உண்டு. நீர்ச்சத்தும் நிரம்பப்பெற்றது.
தீக்காயம்:
வெற்றிலை குளிர்ச்சியானது. தீக்காயங்கள் உள்ள இடத்தில் வெற்றிலையுடன் மஞ்சளை சேர்த்து அரைத்து தடவி வரலாம். தீக்காய எரிச்சல் நீங்கும். காயமும் விரைவாக ஆறும்.
பல் சொத்தை:
வெற்றிலையை வெறும் வாயில் மென்று வந்தால் பற்கள், ஈறுகள் பலப்படும். பல் சொத்தையாவதும் தவிர்க்கப்படும்.
துர்நாற்றம்:
வாயில் துர்நாற்றம் வீசுவதற்கு வயிற்றில் நுண்கிருமிகள் இருப்பதுதான் காரணம். வெற்றிலையை சாறு எடுத்து பருகினால் அது துர்நாற்றத்திற்கு காரணமான நுண்கிருமிகளை கொன்று நிரந்தர தீர்வளிக்கும்.
எரிச்சல்:
தோல் சம்பந்தப்பட்ட அலர்ஜி, எரிச்சல் போன்ற அனைத்திற்கும் சிறந்த மருந்தாக வெற்றிலை விளங்குகிறது. 10 வெற்றிலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்கவிட்டு சாறு எடுத்துக்கொள்ளவும். அந்த சாற்றை தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து உடல் முழுவதும் தேய்த்து விட்டு, சிறிது நேரம் கழித்து குளித்துவிடலாம்.
மேலும் படிக்க | Health Alert: காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத ‘சில’ உணவுகள்..!!
குளிக்கும் நீரிலும் இந்த சாற்றை கலந்து கொள்ளலாம். எரிச்சல், அரிப்பு, அலர்ஜி போன்ற சரும பிரச்சினைகள் நீங்கும். இதில் ஆண்டி இன்ப்ளேமேட்ரி, ஆண்டி பேக்டீரியல் போன்ற பண்புகள் உள்ளதால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
மேலும் படிக்க | உங்களுக்கு இறைச்சி - முட்டை பிடிக்காதா? புரத பற்றாக்குறையை போக்கும் 5 உணவுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ