அதிகரித்து வரும் எல்பிஜி சமையல் எரியாவ்யு சிலிண்டரின் விலை பலரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. அதன் மத்தியில் உங்களுக்கு நிம்மதி அளிக்கும் விதமாக, இப்போது நீங்கள் எல்பிஜி சிலிண்டரை மலிவாகப் பெறலாம். இதன் கீழ், நீங்கள் இன்னும் பல சலுகைகள் மற்றும் நன்மைகளைப் பெறுவீர்கள். இதற்காக, நீங்கள் பேடிஎம் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்ய வேண்டும்.
இந்நிலையில், பழைய வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இலவச சிலிண்டர் வெல்வதற்கான வாய்ப்பை பேடிஎம் நிறுவனம் வழங்குகிறது. இதை பெறுவதற்கு சிலிண்டர் முன்பதிவின் போது, கட்டணம் செலுத்துவதற்கு முன்பாக ப்ரீ கேஸ் என்ற கூப்பனை நீங்கள் நிரப்ப வேண்டும்.
மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலை மாதம் டிஏ அதிகரிக்குமா? ஏஐசிபிஐ தரவுகள் சொல்வது என்ன
அதேபோல் புதிய வாடிக்கையாளர்கள் தங்களுடைய முதலாவது முன்பதிவு பரிவர்த்தனையை செய்யும்போது பிளாட் கேஷ்பேக் அளிக்கப்படுகிறது. இதற்கு முன்பதிவு செய்யும்போது பர்ஸ்ட் சிலிண்டர் என்ற புரோமோ கோட்டை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
இந்த ரீஃபண்ட் சலுகை இன்டேன், ஹெச்பி கேஸ் மற்றும் பாரத் கேஸ் ஆகிய மூன்று எல்பிஜி நிறுவனங்களைச் சேர்ந்த சிலிண்டர்களுக்கும் பொருந்தும். இது மட்டுமின்றி, பேடிஎம் போஸ்ட்பெய்டு என பிரபலமாக அறியப்படும் பேடிஎம் நௌ பே லேட்டர் சேவையில் பதிவு செய்வதன் மூலம் அடுத்த மாதம் சிலிண்டர் புக்கிங்கிற்கும் பணம் செலுத்த முடியும்.
பேடிஎம் இல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வது எப்படி?
* முதலில் பேடிஎம் ஆப்புக்கு உள்ளே செல்லவும்.
* அதில் ரீசார்ஜ் மற்றும் பில் பேமென்ட் என்கிற ஆப்ஷனில் புக் கேஸ் சிலிண்டர் என்பதை தேர்வு செய்யவும்.
* எந்த நிறுவனத்திடமிருந்து சிலிண்டர் பெற விரும்புகிறீர்கள் என்பதை அது கேட்கும். அதற்கான பதிலை நிரப்பவும்.
* இதற்குப் பிறகு உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை குறிப்பிடவும்.
* பின்னர் பணம் செலுத்துவதற்கான பரிவர்த்தனை தொடங்கும். பேடிஎம் வாலட், பேடிஎம் யுபிஐ, இன்டர்நெட் பேங்கிங் உள்ளிட்ட அனைத்து வகையிலும் பணம் செலுத்தலாம். அதேபோல் ப்ரீ கேஸ் என்ற கூப்பன் கோட்டை உள்ளீடவும்.
* இப்போது உங்கள் பண பரிவர்த்தனை முடிந்த பிறகு முன்பதிவு உறுதி செய்யப்பட்டுவிடும். அதேபோல் அருகில் உள்ள உங்கள் சிம்லிண்டர் ஏஜென்சியில் இருந்து உங்கள் வீட்டுக்கு எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்யப்படும்.
மேலும் படிக்க | SBI Recruitment 2022: பாரத ஸ்டேட் வங்கி வேலைக்கு விண்ணப்பிக்கலாமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR