2023 வரை குருபகவானின் சிறப்பு அருள்: இந்த 3 ராசிகளுக்கு ஜாக்பாட்

Jupiter Transit: குருவின் ராசி மாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், 3 ராசிக்காரர்களுக்கு குருப்பெயர்ச்சியால் சுப யோகம் அமையும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 10, 2022, 12:51 PM IST
  • 3 ராசிக்காரர்களுக்கு குருப்பெயர்ச்சியால் சுப யோகம் அமையும்.
  • வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ரிஷப ராசிக்காரர்களுக்கு இது மிக நல்ல நேரம்.
  • தேவகுரு வியாழனின் ராசி மாற்றம் மிதுன ராசிக்காரர்களுக்கு நன்மையாக அமையப் போகிறது.
2023 வரை குருபகவானின் சிறப்பு அருள்: இந்த 3 ராசிகளுக்கு ஜாக்பாட் title=

ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறது. கிரகங்களின் ராசி மாற்றம் மனிதர்களின் வாழ்வில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

குரு பகவான் ஞானத்திற்கும் மகிழ்ச்சிக்கும் காரணியாகக் கருதப்படுகிறார். தேவகுரு பிருஹஸ்பதி ஏப்ரல் 12 ஆம் தேதி தனது பிரியமான ராசியான மீன ராசிக்கு மாறினார். குருவின் ராசி மாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், 3 ராசிக்காரர்களுக்கு குருப்பெயர்ச்சியால் சுப யோகம் அமையும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.  

ரிஷபம்:
வியாழன் ரிஷப ராசிக்கு 11ம் ஸ்தானத்தில் சஞ்சரித்துள்ளார். இது வருமானம் மற்றும் லாபத்தின் இடமாக கருதப்படுகின்றது. ஆகையால், இந்த காலகட்டத்தில் உங்கள் வருமானம் உயரும் வாய்ப்புகள் உள்ளன. புதிய வருமான ஆதாரங்களையும் நீங்கள் உருவாக்க முடியும். 

வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ரிஷப ராசிக்காரர்களுக்கு இது மிக நல்ல நேரம். வணிகர்கள் பணம் சம்பாதிக்கலாம். நீங்கள் பணிபுரியும் பாங்கும் விதமும் மேம்படும். மேலதிகாரிகளிடம் பாராட்டுகளை பெறுவீர்கள். உங்கள் பணி பாராட்டப்படும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும். தேவகுரு பிருஹஸ்பதி உங்கள் ராசிக்கு 8 ஆம் வீட்டிற்கு அதிபதி ஆவார். எனவே இது உங்களுக்கு நல்ல நேரமாக இருக்கும்.

மேலும் படிக்க | புதன் வக்ர பெயர்ச்சி; இந்த ராசிக்காரர்களுக்கு பொற்காலம் ஆரம்பம் 

மிதுனம்:
தேவகுரு வியாழனின் ராசி மாற்றம் மிதுன ராசிக்காரர்களுக்கு நன்மையாக அமையப் போகிறது. வியாழன் கிரகம் உங்கள் ராசியிலிருந்து பத்தாம் வீட்டில் சஞ்சரித்துள்ளார். இது வணிகம், வேலை மற்றும் பணியிட உயர்வுக்கான ஸ்தானமாக கருதப்படுகின்றது. 

புதிய வேலை தேடுபவர்களுக்கு இது ஏற்ற நேரமாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் எதிர்பார்த்த ஒரு நல்ல வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகள் லாபம் அடையலாம். மார்க்கெட்டிங் மற்றும் மீடியா துறைகளுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும். பொதுவாக வியாழனின் சஞ்சாரம் அனைத்து மிதுன ராசிக்காரர்களுக்கும் சாதகமாக இருக்கும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு வியாழன் சஞ்சாரம் நல்ல செய்தியைத் தரப்போகிறது. வியாழன் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரித்துள்ளார். இது அதிர்ஷ்டம் மற்றும் வெளிநாட்டு பயணத்தின் ஸ்தானமாக கருதப்படுகின்றது. ஆகையால், இந்த நேரத்தில் நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். 

குருபெயர்ச்சி பலன்களால் கடக ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பல பணிகள் நிறைவேறும். வியாழன் கிரகம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டின் அதிபதி. இது எதிரியின் இடம் என்று அழைக்கப்படுகிறது. இதனால், இந்த காலத்தில் கடக ராசிக்காரர்கள் எதிரிகளை எளிதில் வெற்றி கொள்ளலாம். 

மேலும் படிக்க | இன்று தற்காலிக பதவி உயர்வு கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறலாம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News