குழந்தைகளுக்கு மனோரீதியான தாக்குதல்களை COVID-19 ஏற்படுத்துமா..?

கொரோனா குழந்தைகளுக்கு மனோரீதியான தாக்குதல்களை ஏற்படுத்தியதா?

Last Updated : Jun 7, 2020, 02:30 PM IST
குழந்தைகளுக்கு மனோரீதியான தாக்குதல்களை COVID-19 ஏற்படுத்துமா..? title=

கொரோனா குழந்தைகளுக்கு மனோரீதியான தாக்குதல்களை ஏற்படுத்தியதா?

உலகம் முழுவதையும் நிலைகுலைய வைத்த கொரோனா காலத்தில், இந்திய அரசு லாக்டவுன் என்ற அஸ்திரத்தைப் பயன்படுத்தியது.  தற்போது படிப்படியாக லாக்டவுனை தளர்த்தி சந்தை, தொழில் வணிகங்கள் இயங்குவதற்காக, சில கட்டுபாடுகளுடன் அன்லாக் 1.0 என்ற பெயரில் அனுமதி கொடுத்துள்ளது ... ரயில்களும், விமானங்களும் இயங்கத் தொடங்கின. தற்போது, ஆலயங்களும், உணவகங்களும் திறக்கப்படுகின்றன இப்படி எல்லாத் துறையிலும் தளர்வுகள் காணப்படுகின்றன.

ஆனால் குழந்தைகளுக்கு எந்தவித தளர்வும், நிம்மதியும் கிடைக்கவில்லை. கல்விச்சாலைகள் இன்னும் மூடப்பட்டு, குழந்தைகள் வீடுகளின் நான்கு சுவர்களுக்குள் சிறையில் அடைபட்டுள்ளனர் ..

கொரோனாவின் அதிகரித்து வரும் தாக்கத்தினால்,   குழந்தைகள் வீட்டை விட்டு வெளியேற பெரும்பாலான பெற்றோர்கள் அனுமதிக்கவில்லை… இரண்டரை மாதங்களாக வீடுகளில் அடைபட்டிருக்கும் குழந்தைகளுக்கு சோர்வு ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கும் செல்ல முடியது, நண்பர்களுடன் விளையாட முடியாது. பூங்காவிற்கோ, வெளியிலோ செல்லமுடியாது.  இதுபோன்ற கட்டுப்பாடுகள், குழந்தைகளின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

இந்த நேரத்தில் குழந்தைகள் மோசமாக உணர்வது இயல்பானது என்று உளவியலாளர்கள் கூறுகின்றனர்.   நண்பர்கள், விளையாட்டு மற்றும் ஆசிரியர்கள் என அனைத்தையும் கோவிட் 19, குழந்தைகளிடம் இருந்து விலக்கி வைத்துவிட்டது. இதன் அதிர்ச்சியும், தாக்கமும் அவர்கள் மனதில் ஏற்பட்டிருக்கும். பல குழந்தைகள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உளவியலாளர்கள் கூறுகின்றனர்.

READ | உடல் ஆரோக்கியத்தை பாதுக்காக உதவும் பச்சை மிளகாய் பற்றி தெரியுமா?

லாக்டவுன் காரணமாக, பல குழந்தைகளின் வாழ்க்கைமுறையே தலைகீழாக மாறியுள்ளது… காலையில் எழுந்து பள்ளிக்குச் செல்லும் வழக்கம் மாறிவிட்டது. இரவு தாமதமாக தூங்குவது, காலையில் நேரம் சென்று கண் விழிப்பது, உணவு உண்ணும் நேரம் மாறியது, உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உடல் உடற்பயிற்சிகள் செய்யாமல் இருப்பது என இப்போது அவர்களின் அன்றாட நடைமுறை மாறிவிட்டது.    பள்ளிக்கு செல்வதும், தங்கள் அக்கம்பத்தில் உள்ள நண்பர்களுடனான தொடர்பும் குழந்தைகளை உற்சாகமாக வைத்திருக்கும்.... ஆனால் லாக்டவுன், அவர்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்டுவிட்டது

வீட்டிலேயே இருக்கும் குழந்தைகளின் வழக்கம் நிறைய மாறிவிட்டது ... சமீபத்தில் CRY அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், குழந்தைகள் அதிக கேஜெட்களில் செலவிடும் நேரம் அதிகரித்துள்ளது என்று இந்த ஆய்வில் 88 சதவிகித பெற்றோர்கள் சொன்னார்கள், 43% குழந்தைகள் இதில் அதிக நேரத்தை செலவிடுவது இந்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 35 சதவிகித  குழந்தைகளின் உணவு முறைகள் வெகுவாக மாறிவிட்டன.. குழந்தைகளின் உற்சாகமும், அமைதியும் குறைந்துவிட்டதாக 50 சதவிகித பெற்றோர்கள்  கூறினார்கள்... கோவிட் 19 தொடர்பாக லாக்டவுன் அமலில் இருப்பது பற்றி குழந்தைகளுடன் பேசுவதாக 54 சதவிகித பெற்றோர்கள் தெரிவித்தனர்…. குழந்தைகளை வேறு செயல்களில் ஈடுபடுத்துவதன் மூலம் இந்த முடக்கநிலையில் இருந்து கவனத்தை திசை திருப்ப முயற்சித்ததாக 47 சதவிகித பெற்றோர் கூறுகின்றனர்.

கொரோனா பாதித்திருக்கும் இந்த சூழ்நிலையில் குழந்தைகளின் மகிழ்ச்சி குறைவது இயல்பானது என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள்... பெரியவர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டிருப்பதால், அது குழந்தைகளின் மகிழ்ச்சியிலும் தாக்க்த்தை ஏற்படுத்தும் என்று சில உளவியலாளர்கள் நம்புகிறார்கள்.  கொரோனாவின் சீற்றத்தால் உலகமே நிம்மதியிழந்து தவிக்கும் நிலையில்,   குழந்தைகளுக்கும் அதன் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது.   இந்த உணர்வோடு வாழ அவர்களுக்கு கற்பிக்க வேண்டும்…

READ | கொரோனா காலத்தில் உடலுறவு கொள்ளும் போது முகமூடி அணிய பரிந்துரை..!

பெற்றோர்கள் தங்களை குழந்தைகளின் பாதுகாவலர்களாக கருதுகிறார்கள். ஆனால், இதிலிருந்து விலகி இருப்பதற்கு முயற்சிக்க வேண்டும் என்பது கசப்பான உண்மை தான்.   குழந்தைகளை மிகவும் பலவீனமாக்குவதற்கு பதிலாக, அவர்களை நிலைமைக்கு ஏற்றவாறு ஏமாற்றங்களுடன், அனுசரித்தும் வாழ கற்றுக் கொடுக்க வேண்டும் ..... உங்கள் குழந்தையுடன், அவர்களது ஆசைகள், எதிர்பார்ப்புகள், நிதர்சனமான நிலைமை என பேசுங்கள் என்று   உளவியலாளர்கள் கூறுகிறார்கள்…

வீட்டில் இருக்கும்போது குழந்தையின் நடத்தையில் மாற்றங்கள் ஏதேனும் தென்பட்டால், எச்சரிக்கையாக இருங்கள்... குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்பட்டால், அது  வெவ்வேறு அறிகுறிகள் மூலம்  வெளிப்படையாகத் தெரியும். உளவியலாளர்களின் கூற்றுப்படி, குழந்தைகள் மருத்துவ மன அழுத்தத்தில் இருக்கும்போது, பல விஷயங்களில் ஆர்வத்தை இழக்கத் தொடங்குகிறார்கள்… எந்தச் செயலையும் அனுபவிக்கவில்லை என்றால், அது மனச்சோர்வின் அறிகுறியாகும்… மேலும் குழந்தை முன்பை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சாப்பிட்டலும், அல்லது தூங்கினாலும், கவனம் செலுத்த வேண்டும். வழக்கத்திற்கு மாறாக அமைதியாகவோ, எரிச்சலாக இருந்தாலும், கோபப்படத் தொடங்கினாலும் அவை மன அழுத்தத்தின் அறிகுறிகள் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், இது இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தால் அல்லது தினசரி தொடர்ந்தால், அது கவலைப்பட வேண்டிய விஷயம்.

தற்போதைய சூழ்நிலையில், குழந்தைகள் மீதான பெற்றோரின் பொறுப்பு பெருமளவில் அதிகரித்திருப்பதாக உளவியலாளர்கள் நம்புகின்றனர். இதுபோன்ற அறிகுறிகளை குழந்தைகளிடம் கண்டால் அது மனச்சோர்வு என்பதை புரிந்துக் கொள்ளவும்.

READ | சமூக இடைவேளை, முகமூடி, கண்ணாடி ஆகியவை COVID-யை தடுக்கும்: ஆய்வு!

குழந்தைகள் சொல்லும் எல்லாவற்றையும் கவனமாகக் கேளுங்கள்… அவ்வப்போது அவர்களுடன் பேசிக் கொண்டே இருங்கள், அவர்களுடைய எல்லா கேள்விகளுக்கும் அன்புடனும் பொறுமையுடனும் பதிலளிக்கவும்.

முடிந்தால், அவர்களுடன் அதிக நேரத்தைச் செலவிடுங்கள், வீட்டில் விளையாடக்கூடிய விளையாட்டுகளை விளையாடுங்கள்… பெற்றோர்கள் அல்லது வீட்டின் உறுப்பினருடன் எப்போதுமே குழந்தை இருப்பதை உறுதி செய்யுங்கள். குழந்தை உங்களிடம் இருந்து வேறு இடத்தில் விலகி இருந்தால், அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இணைந்திருங்கள் ... அவர்களுடன் தொலைபேசியில் சிறிது நேரம் பேசுங்கள்.  இயல்பாக இருப்பதாக அவர்களை உணர வைக்கவும் ... வீட்டில் ஒரு இணக்கமான நடைமுறையை உருவாக்கி அதன்படி செயல்படும் வழக்கத்தை உருவாக்குங்கள்.  உடல் செயல்பாடுகளை சரியாக பராமரிக்க குழந்தையுடன் சேர்ந்து நடைப் பயிற்சியை மேற்கொள்வதும் நல்லது.

சில நேரங்களில் பெற்றோர்கள் குழந்தைகளை எச்சரிக்கும் தகவல்களில் இருந்து விலக்கி வைக்கிறார்கள், இது தவறு... கொரோனாவைப் பற்றி எல்லா வகையான செய்திகளும் புதிய தகவல்களும் தினமும் வந்து கொண்டிருக்கின்றன, இது குழந்தைகளுக்கு தெரியவேண்டும்.  அவர்களுக்கு அச்சம் ஏற்படுத்த வேண்டாம் என்று ஒதுக்கி வைப்பது சரியல்ல ... கொரோனா வைரஸ் விவாதத்தில் பெற்றோர்கள் குழந்தைகளுடன் ஆக்கப்பூர்வமான விஷயங்களை விவாதிக்க வேண்டும் ... இந்த கடினமான காலங்களில் குழந்தைகளுடன் இயல்பாக இணைந்திருக்க வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.... உடல் செயல்பாடு மன அழுத்தத்தை அகற்ற உதவுகிறது என்று சில உளவியலாளர்கள் கூறுகின்றனர். எனவே குழந்தைகளுடன் சற்று நேரம் நடந்து செல்லுங்கள்.

READ | கோடை காலத்தில் ஏற்படும் வறட்டு இருமலை போக்க சில வீட்டு வைத்தியங்கள்..

கொரோனா வைரஸ் காரணமாக குழந்தைகளிடையே மனச்சோர்வு அதிகரித்து வருகிறது, எனவே சில குழந்தைகளுக்கு அதிக உதவி தேவை என்று கூறும் நிபுணர்கள், சில நேரங்களில் உளவியல் நிபுணர்களின் தொழில்முறை உதவி தேவை என்று கூறுகின்றனர். கொரோனா நெருக்கடியின் போது குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் மட்டும் அல்ல, மன ஆரோக்கியமும் கவனிக்கப்பட வேண்டியது அவசியம் என்பது தெளிவாகிறது.   

- மொழியாக்கம்: மாலதி தமிழ்ச்செல்வன்... 

Trending News