Aadhar Card Update: 10 வருடத்திற்கு ஒரு முறை ஆதார் அட்டையை நிச்சயமாக அப்டேட் செய்ய வேண்டும் என்கிற ஒரு அறிவிப்பு மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதேநேரத்தில் செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் இந்த அப்டேட்டை இலவசமாக செய்து கொள்ளலாம் என்கிற அறிவிப்பும் கொடுத்து இருக்காங்க.
எதற்காக இந்த ஆதார் அட்டை அப்டேட் செய்ய வேண்டும்? யார் யாரெல்லாம் ஆதார் அட்டையை அப்டேட் செய்ய வேண்டும்? ஆதார் அட்டையை அவசியம் அப்டேட் செய்ய வேண்டுமா? ஒருவேளை ஆதார் அட்டையை அப்டேட் செய்யவில்லை என்றால் என்னவாகும்? இப்படி நிறைய கேள்விகள் மக்கள் மனதில் எழுந்துள்ளது. அதற்கான பதிலை தெரிந்துக்கொள்ளுவோம்.
ஒருவர் ஆதார் அட்டை எடுத்து 10 வருடங்கள் முடிந்திருந்தால், அதை புதுப்பிக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆதார் அட்டையை அப்டேட் செய்ய சொல்லி இருக்கிறார்கள்.
10 வருடத்தில் சிலரின் அட்ரஸ் ப்ரூப், ஐடி ப்ரூப் மாறி இருக்கலாம். அதை கொடுத்து அப்டேட் செய்துக்கொண்டால் டெமோகிராபிக் ஆதென்டிகேஷன் பண்ணும்போது ஃபெயிலியர் ஆகாமல் இருக்கும். அதற்காக தான் இந்த டாக்குமெண்ட் அப்டேஷன் செய்ய வேண்டும் என்பது அவசியமாகிறது.
மேலும் படிக்க - ஆதார் அட்டை புதுப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 14! ரொம்ப ஈஸி.. ஸ்டெப்-பை-ஸ்டெப்
ஆதார் அப்டேட்டில் எத்தனை வகைகள் உண்டு?
மக்கள் இந்த அப்டேட்டை செய்துக்கொள்வது நல்லது. ஆதார் ஆட்டையை பொறுத்த வரை டெமோகிராபிக் அண்ட் பயோமெட்ரிக் அப்டேஷன் என இரண்டு அப்டேஷன் இருக்கிறது.
பயோமெட்ரிக் அப்டேஷன் என்றால் என்ன?
அஞ்சு வயசுக்குள்ள இருக்கிற குழந்தைகளுக்கு ஆதார் அட்டை எடுத்திருந்தால், 10 வருடம் கழித்து அவர்களுக்கு பயோமெட்ரிக் அப்டேஷன் அவசியம். அதாவதுக் அவரிகளின் கை ரேகை, கண்ணு ஸ்கேன் செய்து, போட்டோ அப்டேட் செய்ய வேண்டும்.
டெமோகிராபிக் அப்டேஷன் என்றால் என்ன?
அடுத்தது டெமோகிராபிக் அப்டேஷன். இதில் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், முகவரி ஆகியவற்றை அப்டேட் செய்துக்கொள்ளலாம். இங்கு பெயர், பிறந்த தேதி ஒரே ஒரு முறை தான் அப்டேட் செய்ய முடியும். முகவரி அப்டேட் செய்ய அதுக்கான டாக்குமெண்ட் ப்ரூப் கொடுத்து அப்டேஷன் செய்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க - 4 வகையான ஆதார் அட்டைகளில் எந்த கார்டை எதற்கு பயன்படுத்தலாம்? UIDAI சொல்லும் டிப்ஸ்!
ஆதார் அப்டேட் செய்ய ஆதார் மையத்துக்கும் வேண்டுமா?
பயோமெட்ரிக் அப்டேஷன் செய்ய வேண்டும் என்றால், ஆதார் என்ரோல்மென்ட் சென்டருக்கு தான் நேரடியா செல்ல வேண்டும். அதுமட்டுமிலாமல் சில வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபீஸ் அலுவலகத்தில் ஆதார் அப்டேட் வசதி உள்ளது.
அதேநேரம் டாக்குமெண்ட் அப்டேஷன் செய்ய வேண்டும் என்றால், ஆதார் அட்டையில் உங்கள் மொபைல் நம்பர் பதிவு செய்திருதால், நீங்கள் ஆன்லைன் மூலம் அப்டேட் செய்துக்கொள்ளலாம் ஆதார் மையத்துக்கும் போக வேண்டும் என்ற அவசியம் கிடையாது
செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள்ள ஆதார் அட்டையை புதுப்பிக்காவிட்டால் ஏதாவது பிரச்சனை ஏற்படுமா? என்றால் ஆதார் அட்டை முடக்கம் செய்யப்பட மாட்டாது. எனவே அதை பத்தி யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். உங்கள் ஆதார் அட்டை தொடர்ந்து செயல்பாட்டில் தான் இருக்கும். ஆனால் ஆதார் அட்டையை அப்டேட் செய்துக்கொள்வது நல்லது.
ஆதார் அட்டையை புதுப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டுமா?
செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் ஆதார் அட்டையை புதுப்பித்தால், அதற்கு கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியது இல்லை. முற்றிலும் இலவசம். செப்டம்பர் 14 ஆம் தேதிக்கு பிறகு ₹50 கட்டணம் செலுத்தி தான் ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டியதா இருக்கும்.
மேலும் படிக்க - ஆதார் அட்டையை எப்படி இலவசமாகப் புதுப்பிக்கலாம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ