உற்சாகத்தை கொடுக்கும் பூஸ்டர் உணவுகள்! மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் லுடோலின்

Food for Health: வீக்கம் மற்றும் பதட்டத்தை எதிர்த்துப் போராட லுடோலின் ஃபிளாவனாய்ட் உணவில் அவசியமாக இருக்க வேண்டும். எந்தெந்த உணவுகளில் லுடோலின் இருக்கிறது தெரியுமா?  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 18, 2022, 04:56 PM IST
  • மனதிலும் உடலிலும் ஆற்றலை அதிகரிக்கும் அருமையான ஆகாரங்கள்
  • ஆற்றலை அதிகரிக்கும் உணவுப் பட்டியல்
  • லுடோலின் ஃபிளாவனாய்ட் சத்துக் கொண்ட உணவுவகைகள்
உற்சாகத்தை கொடுக்கும் பூஸ்டர் உணவுகள்! மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் லுடோலின் title=

புதுடெல்லி: பல நோய்களுக்கு மூல காரணம் நாள்பட்ட அழற்சி ஆகும். நாள்பட்ட அழற்சியால் பாதிக்கப்படுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன என்றாலும், மாசுபாடு, மன அழுத்தம், பதட்டம், புகைபிடித்தல், போதிய தூக்கமின்மை, அதிக மது அருந்துதல் போன்றவை மிகவும் முக்கியமானவை. இந்த பிரச்சனைகளை எதிர்கொள்பவர்கள் உணவில் சில ஊட்டச்சத்துகளை சேர்த்துக் கொள்வதன் மூலம் சிக்கலை தீர்க்கலாம். வீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் ஊட்டச்சத்துக்களில் லுடியோலின் முதன்மையானது ஆகும், இந்த சத்து பல்வேறு தாவர அடிப்படையிலான உணவுகளில் உள்ளது. விலை மலிவான, நமக்கு சுலபமாக கிடைக்கும் உணவுப் பொருட்களிலேயே இந்த சத்து இருக்கிறது.

பூசணிக்காயில் லுடியோலின் என்ற சத்து அதிகம் உள்ளது. நாம் வழக்கமாக பயன்படுத்தும் பரங்கிக்காய், பூசணிக்காய், சிவப்பு பூசணி என பூசணியின் அனைத்து வகைகளிலும் லுடோலின் எனப்படும் லுடியோலின் அதிகம் உள்ளது.

நரம்பியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் முக்கிய நுண்ணூட்டச்சத்துக்களில் ஒன்று வோக்கோசு (Parsley) ஆகும். இதில் லுடோலின் மற்றும் ஃபோலேட் ஆகிய முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. வோக்கோசு மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது, மன ஆரோக்கியம் மற்றும் நமது உடலின் ஆற்றலை மேம்படுத்தும் வேலையை வோக்கோசு செய்கிறது.

மேலும் படிக்க | காலை உணவை இப்படி சாப்பிட்டால் நீரிழிவு கட்டுக்குள் வரும்

அத்துடன், ஒட்டுமொத்த அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துவதால் கொத்தமல்லியைப் போலவே தோற்றமளிக்கும் இந்த கீரை வகையை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. 

இந்த ஊதா நிற இலைக் காய்கறிகள் லுடோலினின் மற்றொரு சிறந்த மூலமாகும், கீரை வகைகளில் சிவப்பு நிற கீரைகளை சேர்த்துக் கொள்ளவும். ரேடிச்சியோ என்ற கீரை மிகவும் நல்லது.  

மேலும் படிக்க | வைட்டமின் பி12 குறைபாடு இருக்கா? சைவ உணவுக்காரர்களுக்கான அற்புதமான வழி

குடை மிளகாயில் லுடோலின் அதிக அளவில் உள்ளது. இந்த ஊட்டச்சத்து மட்டுமல்ல, குடை மிளகாய் பல்வேறு சத்துக்களைக் கொண்டது. பூஞ்சை காளான், பாக்டீரியா எதிர்ப்பு, நோயெதிர்ப்புத் தடுப்பு, ஆக்ஸிஜனேற்ற மற்றும் நோயெதிர்ப்புத் தூண்டுதல் போன்ற பண்புகளை வெளிப்படுத்தும் உயிரியக்க சேர்மங்கள் அதிகம் நிறைந்தது குடை மிளகாய். நீரிழிவு எதிர்ப்பு மற்றும் நரம்பியல் செயல்பாடுகளுக்கும் குடை மிளகாய் நல்லது. 

செலரி என்ற கீரை வகையில் லுடோலின் அதிகம் உள்ளது. செலரியை பச்சையாகவோ, சமைத்ததோ அல்லது ஜூஸ் செய்தோ பயன்படுத்தலாம். இது, அழற்சி எதிர்ப்பு பண்பு கொண்டது. லுடோலினின் ஆகச் சிறந்த மூலம் செலரி என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. 

மேலும் படிக்க | நீங்க எவ்வளவு உணவை வீணடிக்கிறீங்க தெரியுமா? அதிர்ச்சியளிக்கும் தரவுகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News