சனிப்பெயர்ச்சியால் ராசிகளில் மிகப்பெரிய தாக்கம்: இந்த 3 ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம்

Sani Peyarchi: 30 ஆண்டுகளுக்குப் பிறகு, சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழைவதன் தாக்கம் நாடு மற்றும் உலக நிகழ்வுகளில் பிரதிபலிக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 29, 2022, 11:19 AM IST
  • சனிப்பெயர்ச்சி நாட்டிலும் உலகிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்
  • சனியின் ராசி மாற்றம் ரிஷப ராசி மற்றும் லக்னத்தை சேர்ந்தவர்களுக்கு ராஜயோகத்தை உருவாக்கும்.
  • சனியின் சஞ்சாரம் மிதுன லக்னம் மற்றும் ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
சனிப்பெயர்ச்சியால் ராசிகளில் மிகப்பெரிய தாக்கம்: இந்த 3 ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம் title=

சனிப்பெயர்ச்சி 2022: சனியின் பெயர்ச்சி ஜோதிடத்தில் ஒரு பெரிய மாற்றமாக கருதப்படுகிறது. ஏனெனில் சனி கிரகம் அனைத்து கிரகங்களிலும் மிக மெதுவாக நகரும் கிரகமாகும். சனி பகவான் இரண்டரை வருடங்களில் ஒரு முறை ராசியை மாற்றுகிறார். 

இன்று அதாவது ஏப்ரல் 29 ஆம் தேதி சனி பகவான் தனது சொந்த ராசியான மகர ராசியை விட்டு விலகி கும்ப ராசியில் பிரவேசிக்கிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனிபகவான் தனது ராசியான கும்பத்தில் வருவதால் அனைத்து ராசிகளிலும் இதன் தாக்கம் இருக்கும். எனினும், குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி மிகவும் லாபகரமானதாக இருக்கும். 

சனிப்பெயர்ச்சி நாட்டிலும் உலகிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்

30 ஆண்டுகளுக்குப் பிறகு, சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழைவதன் தாக்கம் நாடு மற்றும் உலக நிகழ்வுகளில் பிரதிபலிக்கும். மோசடி, பொய், அநீதி, முறைகேடு, ஊழல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இந்த ஆண்டு தக்க பதில் கிடைக்கும். இப்படிப்பட்டவர்கள் நீதிமன்றம், சிறைச்சாலை என இவ்விடங்களுக்கு அடிக்கடி செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம். இது தவிர பணவீக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீதித்துறை செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படலாம்.

இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்

மேஷம்: 

மேஷ ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சியால் வாழ்வில் பல முன்னேற்றங்கள் ஏற்படும். பண வரவு மற்றும் மரியாதை அதிகரிக்கும். நீண்ட நடகளாக நீங்கள் நினைத்திருந்த ஆசை நிறைவேறும். புதிய வேலைகளைத் தொடங்க இது நல்ல நேரம். குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்பு உண்டு. தொழிலதிபர்களுக்கும் நல்ல காலமாக இது இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

மேலும் படிக்க | சனி அமாவாசையில் சூரிய கிரகணம்; மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள் 

ரிஷபம்

சனியின் ராசி மாற்றம் ரிஷப ராசி மற்றும் லக்னத்தை சேர்ந்தவர்களுக்கு ராஜயோகத்தை உருவாக்கும். தொழிலில் அதிர்ஷ்டம் உண்டாகும். அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். வருமானத்தில் பெரிய அதிகரிப்பு இருக்கும். மிகுந்த மரியாதையும் கௌரவமும் பெறுவீர்கள். அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அமோன வெற்றியை அடைவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் லாபம் உண்டாகும். தடைபட்ட பணிகள் முடிவடையும்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சி ஒரு வரப்பிரசாதமாக அமையும். சனிபகவானின் அருளால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும். செல்வச் செழிப்பும், வாழ்வில் முன்னேற்றமும் உண்டாகும். 

மிதுனம்: 

சனியின் சஞ்சாரம் மிதுன லக்னம் மற்றும் ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நாள்பட்ட நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். அனைத்து வேலைகளிலும் அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும். பணியிடத்தில் மாற்றம் ஏற்படலாம். புதிய வேலை கிடைக்கலாம். தந்தையிடம் தேவையில்லாமல் வாக்குவாதம் செய்யாதீர்கள்.

வாழ்வில் உள்ள துன்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். கடன் சுமையையும் குறையலாம். நிதி ஆதாயத்திற்காக வெளியூர் பயணம் மேற்கொள்ளும் சுபச்செயலும் நடக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவழிப்பீர்கள். கணவன / மனைவி, குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பஞ்சாங்கம்: ஏப்ரல் 29 - மே 5 வரை சனிப் பெயர்ச்சி, முகூர்த்தங்கள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News